For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில் 43 ரன்களா.. ருதுராஜ் கெயிக்வாட் படைத்த உலக சாதனை..வாயடைத்துப்போன எதிரணி.. எப்படி நடந்தது

குஜராத்: இதுவரை உலகில் எந்த ஒரு வீரரும் படைத்திராத பிரமாண்ட சாதனையை சிஎஸ்கே நட்சத்திரம் ருதுராஜ் கெயிக்வாட் படைத்துள்ளார்.

இந்தியாவின் பிரபலமான உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் முதல் போட்டியில் இருந்தே அபாரமாக விளையாடி வந்த தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் அசாம் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக முன்னேறின.

சிஎஸ்கே நீக்கினால், அது அவங்க சாய்ஸ்.. என்னால் ஒன்னும் பண்ண முடியாது.. சாதனை படைத்த ஜெகதீசன் கருத்து சிஎஸ்கே நீக்கினால், அது அவங்க சாய்ஸ்.. என்னால் ஒன்னும் பண்ண முடியாது.. சாதனை படைத்த ஜெகதீசன் கருத்து

காலிறுதிப்போட்டி

காலிறுதிப்போட்டி

அதன்படி இன்றைய நாளின் 2வது காலிறுதிப்போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தான் ருதுராஜ் கெயிக்வாட் மெகா சாதனை படைத்துள்ளார். அதாவது மகாராஷ்டிர அணி கேப்டன் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

எப்படி இது சாத்தியம்

எப்படி இது சாத்தியம்

ஆட்டத்தின் 49வது ஓவரை உத்தரபிரதேச ஸ்பின் பவுலர் ஷிவா சிங் வீசினார். இதில் முதல் 2 பந்துகளை ருதுராஜ் சிக்ஸர்களை விளாச, 3வது பந்து நோ பாலானது. ஆனால் அதிலும் கெயிக்வாட் சிக்ஸர் அடித்தார். மற்ற 4 பந்துகளும் சிக்ஸர்களுக்கு செல்ல ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு எக்ஸ்ட்ரா என 43 ரன்களை விளாசி அசத்தினார் ருதுராஜ் கெயிக்வாட்.

உலகின் முதல் வீரர்

உலகின் முதல் வீரர்

லிஸ்ட் ஏ தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 159 பந்துகளில் 220 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் மகாராஷ்டிரா அணியும் 300 ரன்களுக்கு மேல் கடந்தது. இதுமட்டுமல்லாமல் மற்றொரு சாதனையையும் சமன் செய்துள்ளார்.

ரோகித் பெருமை

ரோகித் பெருமை

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா தான் வைத்திருந்தார். அவர் ஒரே இன்னிங்ஸில் 16 சிக்ஸர்களை அடித்தார். தற்போது ருதுராஜ் கெயிக்வாட்-ம் 16 சிக்ஸர்களுடன் ரோகித்தின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

Story first published: Monday, November 28, 2022, 15:48 [IST]
Other articles published on Nov 28, 2022
English summary
CSK Star Ruturaj gaikwad sets a new world record in List A cricket on Vijay hazare trophy 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X