தென்னாப்பிரிக்கா போயும் மத பிரச்சனையா?.. இம்ரான் தாஹிரை வார்த்தையால் தாக்கிய இந்திய ரசிகர்

Posted By:
ரசிகருடன் சண்டைப்போட்ட இம்ரான் தாஹிர்-வீடியோ

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது.

இந்த நிலையில் ஜோஹென்பெர்க்கில் நடந்த 4வது போட்டியில் மோசமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிரை இந்திய ரசிகர் ஒருவர் திட்டி இருக்கிறார்.

இந்தச் சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ இணையம் எங்கும் பரவி வைரல் ஆகி உள்ளது.

போட்டியில் விளையாடவில்லை

போட்டியில் விளையாடவில்லை

4வது ஒருநாள் போட்டியில் இம்ரான் தாஹிர் விளையாடவில்லை. அந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் களம் இறக்கப்பட்டு இருந்தார்கள். இம்ரான் ஓய்வில் இருக்கும் வீரர்கள் போலவே வாட்டர் பாட்டில், கூல்ட்ரிங்ஸ் கொடுக்கும் வேலை பார்த்தார்.

பிரச்சனை

பிரச்சனை

இவர் இந்த வேலையைப் பார்க்கும் போது அங்கு இருந்த நபரால் திட்டப்பட்டுள்ளார். அவரை அந்த ரசிகர் மத ரீதியாக திட்டி இருக்கிறார். உடனே இம்ரானும் சண்டைக்குச் சென்று உள்ளார்.

அழைத்துச் சென்றார்கள்

அழைத்துச் சென்றார்கள்

இவர்களின் வாக்குவாதம் பெரிதானது. அதற்குள் அங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தார்கள். பின் அவரை உடை மாற்றும் அறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார்கள் .

விசாரணை செய்யப்படும்

விசாரணை செய்யப்படும்

இது குறித்து விசாரணை வேண்டும் என்று இம்ரான் கேட்டு இருக்கிறார். அந்த ரசிகர் இந்தியர் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து விசாரணை நடத்த ஒப்புக் கொண்டு இருக்கிறது.

Story first published: Tuesday, February 13, 2018, 15:50 [IST]
Other articles published on Feb 13, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற