For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓய்வுக்கு பிறகும் விரட்டும் காயம்.. லண்டனில் சச்சினுக்கு மூட்டு அறுவை சிகிச்சை! வைரலாகும் போட்டோ

By Veera Kumar

லண்டன்: ஓய்வுக்கு பிறகும் சச்சின் டெண்டுல்கரை காயங்கள் துரத்துகிறது. மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக லண்டன் மருத்துவமனையில் சச்சின் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவுக்காக 24 வருடங்கள் கிரிக்கெட் ஆடிய சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட், ஒன்டே போட்டிகளில் சேர்த்து, அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

ஓயாத கிரிக்கெட் ஆட்டங்களால் சச்சினுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்பட்டது உண்டு. சிகிச்சைக்கு பிறகு, தொய்வின்றி கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

துரத்தும் காயங்கள்

துரத்தும் காயங்கள்

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போதும் காயங்கள் அவரை விரட்டுகின்றன.

போட்டோ

மூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக லண்டனிலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அங்கு அவருக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை எடுக்கும் போட்டோவை, சச்சின் தனது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரல் போட்டோ

சச்சின் பகிர்ந்த படத்தை பார்த்ததும், உலகமெங்கும் இருந்து அவரது ரசிகர்கள் ஆறுதல் மெசேஜ்களை கொட்ட தொடங்கியுள்ளனர். போட்டோவை ஷேர் செய்கிறார்கள். விரைவில் விரைந்து குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் அவர்கள் கூறிவருகிறார்கள்.

அக்தரும் வாழ்த்து

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஆட்ட காலங்களில் சச்சின் பரம வைரியுமாக இருந்தவருமான சோயிப் அக்தரும், சச்சின் விரைந்து குணமடையத தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, July 7, 2016, 14:42 [IST]
Other articles published on Jul 7, 2016
English summary
India's cricket legend Sachin Tendulkar has undergone a knee surgery at a hospital in London.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X