For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தப்பு.. தப்பு.. அதுக்கு அனுமதி கிடையாது.. தோனியை அடுத்து சிஎஸ்கே வீரருக்கும் தடை.. ஐசிசி அதிரடி!

கிறைஸ்ட்சர்ச் : இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்க்ஸ் குறிப்பிட்ட கிளவுஸ் அணியக் கூடாது என ஐசிசி திட்டவட்டமாக கூறி இருக்கிறது.

சாம் பில்லிங்க்ஸ் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். அந்த அணியின் கேப்டன் தோனிக்கு உலகக்கோப்பையில் ஏற்பட்ட பிரச்சனை போலவே, தற்போது அவருக்கு சர்வதேச டி20 தொடரில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல் பால்ல இருந்து மரண அடி.. வங்கதேசத்துக்கு ஆப்பு வைக்கப் போகும் அதிரடி வீரர்.. ரோஹித் வியூகம்!முதல் பால்ல இருந்து மரண அடி.. வங்கதேசத்துக்கு ஆப்பு வைக்கப் போகும் அதிரடி வீரர்.. ரோஹித் வியூகம்!

உலகக்கோப்பை சர்ச்சை

உலகக்கோப்பை சர்ச்சை

2019 உலகக்கோப்பை தொடரில் தோனி அணிந்த கிளவுஸ் காரணமாக பெரிய சர்ச்சை வெடித்தது. ஐசிசி அந்த கிளவுஸ் அணிய தடை விதித்தது. அதை எதிர்த்து இந்திய ரசிகர்கள் பெரிய அளவில் இணையத்தில் போராட்டம் நடத்தினர்.

தோனி கிளவுஸ்

தோனி கிளவுஸ்

தோனி அணிந்து இருந்த கிளவுஸில் இராணுவ முத்திரை பயன்படுத்தப்பட்டு இருந்ததே இந்த சர்ச்சைக்கு முதல் காரணம். தோனி கௌரவ லெப்டினன்ட் கலோனல் என்பதால் இராணுவ முத்திரை உள்ள கிளவுஸை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

விதிப்படி தவறு

விதிப்படி தவறு

ஐசிசி விதிப்படி அது போன்ற முத்திரை அணிந்து ஆடுவது தவறு எனக் கூறி ஐசிசி அதற்கு தடை விதித்தது. அதன் பின், தோனி அந்த கிளவுஸ் அணிவதை தவிர்த்தார், அதனால், அந்த சர்ச்சை முற்றுப் பெற்றது.

சாம் பில்லிங்க்ஸ்

சாம் பில்லிங்க்ஸ்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தோனி தலைமையின் கீழ் ஆடும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்க்ஸ்-க்கு அதே போன்ற சிக்கல் எழுந்துள்ளது. அவர் சமீபத்தில் தான் இங்கிலாந்து டி20 அணியின் துணை கேப்டன் பதவியை பெற்றார்.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இங்கிலாந்து அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே டி20 தொடரில் பங்கேற்கும் முன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஆடியது இங்கிலாந்து அணி. சாம் பில்லிங்க்ஸ் அந்த போட்டிகளில் தன் புதிய கிளவுஸ் அணிந்து பங்கேற்றார்.

புதிய கிளவுஸ்

புதிய கிளவுஸ்

பயன்படுத்தப்படாத கிரிக்கெட் உபகரணங்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறப்பு கிளவுஸ் அணிந்திருந்தார் சாம் பில்லிங்க்ஸ். அதே கிளவுஸ் அணிந்து தான் டி10 எனும் 10 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆடினார். அது ஐசிசியின் கட்டுப்பாட்டில் வராத தொடர் என்பதால் அதில் எந்த சிக்கலும் எழவில்லை.

ரெப்ரீ தடை

ரெப்ரீ தடை

ஆனால், நியூசிலாந்து - இங்கிலாந்து மோதும் சர்வதேச கிரிக்கெட் தொடர் ஐசிசியின் கட்டுப்பாட்டில் வருவதால், முதல் டி20க்கு முன் சாம் பில்லிங்க்ஸ்-க்கு கிளவுஸ் அணியக் கூடாது எச்சரிக்கை விடுத்தார் மேட்ச் ரெப்ரீ ஆன்டி பைகிராப்ட்ஸ்.

பல நிறங்கள்

பல நிறங்கள்

இந்த தடைக்கு முக்கிய காரணம், அந்த கிளவுஸில் இருந்த நிறங்கள் தான். சுழற்சி முறையில் உருவாக்கப்பட்ட கிளவுஸ் என்பதால் பச்சை, சிவப்பு, நீலம் என பல வண்ணங்களும் அந்த கிளவுஸில் இடம் பெற்று இருந்தது.

நிறம்

நிறம்

ஐசிசி விதிப்படி பேட்டிங் கிளவுசின் 50 சதவீதத்துக்கும் மேல் அணியின் உடை நிறத்தை ஒட்டியோ அல்லது வெள்ளை நிறத்திலோ தான் இருக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் டி20 உடை சிவப்பு நிறத்தில் இருப்பதால் சாம் பில்லிங்க்ஸ்-க்கு தடை விதிக்கப்பட்டது.

வெள்ளை கிளவுஸ்

இதையடுத்து முதல் டி20 போட்டியில் சாம் பில்லிங்க்ஸ் வெள்ளை நிற கிளவுஸ் அணிந்தே ஆடினார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.

Story first published: Sunday, November 3, 2019, 13:21 [IST]
Other articles published on Nov 3, 2019
English summary
Sam Billings banned from using his special batting gloves
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X