கேகேஆர் கண்ணில் தெரிந்த பயம்.. ஒரே நாளில் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையான சாம் பில்லிங்ஸ்!

Posted By:
ஒரே நாளில் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையான பில்லிங்ஸ்!- வீடியோ

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியில் சென்னை அணியில் புதிதாக இணைந்து இருக்கும் சாம் பில்லிங்ஸ் என்ற இங்கிலாந்து வீரர் மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளார். ப்ப்பா என்ன மேட்ச் இது என்று உச்சு கொட்டும் அளவிற்கு இவர் விளையாட்டு நேற்று அமைந்தது.

கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ரவீந்தர் ஜடேஜா கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதில் ஷேன் வாட்சன், ராயுடு, பிராவோ, சாம் பில்லிங்ஸ் மிகவும் அதிரடியாக ஆடினார்கள். முக்கியமாக சாம் பில்லிங்ஸ் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ஏன் விலகல்

ஏன் விலகல்

கடந்த மும்பைக்கு எதிரான போட்டியில்தான் ஜாதவிற்கு அடிப்பட்டது. இதனால் அந்த போட்டியில் இருந்து பாதியில் விலகினார். தற்போது சாம் பில்லிங்ஸ் கேதார் ஜாதாவிற்கு பதிலாக விளையாடுகிறார்.இங்கிலாந்து அணியை சேர்ந்த இவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்.

பெரிய சந்தேகம்

பெரிய சந்தேகம்

நேற்றைய போட்டியில் சாம் பில்லிங்ஸ் இறங்கும் வரை அவர் மீது பெரிய சந்தேகம் இருந்தது. இவர் என்ன அடித்துவிட போகிறார் என்றுதான் சாதாரண ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இங்கிலாந்தில் அவர் ஓப்பனிங் வீரராக களமிறங்கி விளையாடுவதை பார்த்தவர்களுக்கு அவர் திறமை தெரிந்து இருக்கும்.

பெரிய மாற்றம்

பெரிய மாற்றம்

நேற்றைய போட்டியில் அவர் இரண்டு விக்கெட் விழுந்தவுடன் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் நல்ல ரன் ரெட் இருந்தும் கூட அவர் களமிறக்கப்படவில்லை. டோணிதான் அவருக்கு முன்பே இறங்கினார். டோணி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை அவர் முன்பே இறங்கி இருந்தால் போட்டி சீக்கிரமே முடிந்து இருக்க வாய்ப்புள்ளது.

பெரிய அதிரடி

பெரிய அதிரடி

நேற்றைய போட்டியில் சாம் பில்லிங்ஸ் ஆடியது ருத்ர தாண்டவம். வெறும் 23 பந்துகளில் இவர் 56 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸும், இரண்டு பவுண்டரியும் அடக்கம். ஆரம்பமே அதிரடியாக தொடங்கிய சாம் சென்னை அணியை கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டே சென்றார். நேற்று அவர் மட்டும் இல்லையென்றால் இந்த போட்டி சென்னையின் கைநழுவி கூட போய் இருக்கும்.

முதல் போட்டி

முதல் போட்டி

சென்னை அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே இவர் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். அதேபோல் கேதார் ஜாதவ் இடத்தை கண்டிப்பாக நிரப்ப தகுதியான நபர் தான்தான் என்று நிரூபித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை வெற்றி பெறவைத்து ரசிகர்களின் புதிய சிங்கக்குட்டியாகி உள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Sam Billings becomes the most important player in CSK team after yesterday IPL match.
Story first published: Wednesday, April 11, 2018, 12:57 [IST]
Other articles published on Apr 11, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற