For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றியோ தோல்வியோ.. வாழ்க்கையை கத்துக்கங்க.. விடை பெற்றார் சனா மிர்

கராச்சி: பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷமான ஆல்ரவுண்டர் சனா மிர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Recommended Video

Sana Mir announces her retirement from International cricket

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் திறமை மிகு வீராங்கனைகளில் சனாவுக்கு முக்கிய இடம் உண்டு. அருமையான பந்து வீச்சாளர், மிகச் சிறந்த கேப்டன் என பலமுகம் கொண்டவர் இவர்.

சும்மா இருந்த சச்சினை சீண்டிய பாக். வீரர்.. ஒரே கேள்வி.. கூனிக்குறுகி மன்னிப்பு கேட்க வைத்த சச்சின்!சும்மா இருந்த சச்சினை சீண்டிய பாக். வீரர்.. ஒரே கேள்வி.. கூனிக்குறுகி மன்னிப்பு கேட்க வைத்த சச்சின்!

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு சனா மிர் சேர்க்கப்படவில்லை. இது அவருக்கு நிச்சயம் வருத்தம்தான். இருப்பினும் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்ட சனா தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

முதலிடம் பிடித்த முதல் வீராங்கனை

முதலிடம் பிடித்த முதல் வீராங்கனை

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு நாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனை சனாதான். அதேபோல ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீராங்கனையும் சனாதான். ஒரு நாள் போட்டிகளில் அதிகம் ஆடிய பாகிஸ்தான் வீராங்கனையும் சனாதான். மொத்தம் 120 ஒரு நாள் போட்டிகள், 106 டி20 போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.

15 வருட அனுபவம்

15 வருட அனுபவம்

மொத்தம் 15 வருடங்கள் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார் சனா மிர். 19 வயதாக இருக்கும்போது அவர் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆடி அறிமுகமானார். நான்கு வருடம் கழித்து அவர் அயர்லாந்துக்கு எதிராக டப்ளினில் நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்குத் தலைமை தாங்கினார். பாகிஸ்தான் அணியின் 72 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள சனாவுக்குக் கிடைத்த வெற்றிகள் 26 ஆகும்.

கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

அதேபோல இவர் தலைமை தாங்கி ஆடிய 65 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றிகள் 26 ஆகும். 2017ல் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி அனைத்துப் போட்டிகளிலும் தோற்றதால் கேப்டன் பதவியை இழந்தார் சனா. 2016ல் அவரே டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார்.

ஓய்வை அறிவித்தார்

ஓய்வை அறிவித்தார்

இந்நிலையில் தனது ஓய்வை அவர் அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து சனா மிர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக சில முடிவுகளை நோக்கி நான் நகர்ந்து வந்து கொண்டிருந்தேன். இப்போது முடிவெடுத்து விட்டேன. இதுதான் சரியான நேரம் என நான் கருதுகிறேன். எனது திறமையை முழுமையாக என்னால் முடிந்த அளவுக்கு நாட்டுக்காக பயன்படுத்தியுள்ளேன். எனது பயணத்தின்போது நிறைய நண்பர்களை சம்பாதித்துள்ளேன். அருமையான கிரிக்கெட் தோழிகளை சம்பாதித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அனுபவம் நிறைய இருக்கு

அனுபவம் நிறைய இருக்கு

தோழிகள் கூறியது, அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது என நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளது. அவை என்னை மேலும் வலிமையாக்கியுள்ளது. நல்ல வீராங்கனையாக என்னை மாற்ற உதவியது. வெற்றி அடைகிறோமோ அல்லது தோற்கிறோமோ அது வேறு.. ஆனால் வாழ்க்கையை கற்றுக் கொள்ளுங்கள்.. நல்ல வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது முக்கியமானது என்று கூறியுள்ளார் சனா மிர்.

பெண் தோனி

பெண் தோனி

இவரை செல்லமாக எல்லோரும் பொம்பள தோனி என்று சொல்வார்கள். காரணம் கூல் கேப்டனாக இவர் வலம் வந்ததால். எதற்கும் டென்ஷன் ஆக மாட்டார். சிரித்த முகத்துடன் எதையும் எதிர்கொள்வார். நிதானமாக செயல்படுவார்.. அதேசமயம், துல்லியமாக எதையும் மதிப்பிடுவார். எதிரணியினரின் அன்பையும், மதிப்பையும் பெற்ற ஒரு அருமையான பெண்தான் சனா. ஒரு நல்ல ஆல்ரவுண்டரும் கூட. இவருக்கு மிகவும் பிடித்த நான்கு சர்வதேச வீரர்களில் நம்ம ஊர் தோனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 26, 2020, 11:29 [IST]
Other articles published on Apr 26, 2020
English summary
No doubt, Sana Mir is one of the Finest cricket Talent from Pakistan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X