For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்வளவு ஓட்டம் உனக்கு தேவையா? எதுக்கு அந்த குழப்பம்.. அர்ஷ்தீப் தவறை புட்டு வைத்த சஞ்சய் பங்கர்

இந்திய கிரிக்கெட்டில் டர்பன் அணிந்த வாசீம் அக்ரம் போல் பந்து வீசுவார் என எதிர்பார்த்த அர்ஷ்தீப் சிங், தற்போது அசோக் திண்டாவுக்கே சவால் அளிக்கும் விதமாக ரன்களை வாரி வழங்கி வருகிறார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக நோ பால் வீசிய வீரர் என்ற பெருமையை பெற்ற அர்ஷ்தீப் சிங் நேற்று கூட ஒரு நோ பால் வீசி சிக்ஸரை விட்டுக் கொடுத்தார்.

ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 13 ரன்கள் வழங்கிய அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்களை விட்டுக் கொடுத்து நியூசிலாந்துக்கு வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எங்க அப்பா போலீஸ் கமிஷ்னர்.. பாக்.அணியில் இருந்த சிறுபிள்ளை சண்டைகள்..வசீம் அக்ரம் கிளப்பிய பூகம்பம்எங்க அப்பா போலீஸ் கமிஷ்னர்.. பாக்.அணியில் இருந்த சிறுபிள்ளை சண்டைகள்..வசீம் அக்ரம் கிளப்பிய பூகம்பம்

தவறுகள்

தவறுகள்

4 ஓவரில் 51 ரன்கள் அவர் மொத்தமாக வழங்கி நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சொதப்பினார். இந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் இருக்கும் தவறு குறித்து முன்னாள் ஆல் ரவுண்டர் சஞ்சய் பங்கர் அளித்துள்ள கருத்தை தற்போது பார்க்கலாம். அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு நேற்று சுத்தமாக எடுபடவில்லை. அவர் எப்போதுமே ஓயிடு யாக்கர்களை சிறப்பாக வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார் .

 திறமை சோதிக்கப்படலாம்

திறமை சோதிக்கப்படலாம்

தற்போது அவர் தன்னுடைய பந்துவீச்சு குறித்து யோசித்து அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும். இது ஒரு பயணம். உங்களுக்கு நல்ல தொடக்கம் அமையலாம். இது போன்ற போட்டிகளில் உங்கள் திறமை சோதிக்கப்படலாம். கடைசியில் அது அர்ஷ்தீப் சிங் அவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது பொருத்தே அமைகிறது.

தன்னுடைய அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அர்ஷ்தீப் சிங் நீண்ட தூரத்திலிருந்து ஓடி வந்து பந்து வீசுகிறார். இது தேவையற்றது என்று நான் நினைக்கிறேன்.

ஓட்டத்தை குறையுங்கள்

ஓட்டத்தை குறையுங்கள்

ஒரு பந்துவீச்சாளர் எந்த தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீச வேண்டும் என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் வளர்ந்து வரும் வேக பந்துவீச்சாளராக இருந்து உங்கள் உடலில் அவ்வளவு சக்தி இல்லை என்றால் நீங்கள் நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வர தேவையில்லை. அப்படி செய்யும் போது காலை எங்கு வைக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை அர்ஷ்தீப் சிங் சரி செய்து கொள்ள வேண்டும் என்று சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

 மாற்றி கொள்ளுங்கள்

மாற்றி கொள்ளுங்கள்

இதனை தொடர்ந்து பேசிய முகமது கைஃப் , அர்ஷ்தீப் சிங் நீண்ட தூரத்திலிருந்து ஓடி வந்து பந்து வீசுவதன் மூலம் தான் அவருக்கு நோ பால் பிரச்சனை ஏற்படுகிறது. இப்படி ஓடி வரும்போது அவர் தேவையில்லாமல் அவருடைய சக்தியை வீணடிக்கிறார். நோ பால் வீசுவதற்கு இந்த பிரச்சனைதான் அதிகமாக இருக்கிறது. பந்து வீசும் கோணத்தையும் அது முற்றிலுமாக மாற்றுகிறது. எனவே இந்த விஷயங்களில் அவர் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் பதற்றப்படத் தேவையில்லை. அர்ஷ்தீப் சிங் ஒரு நல்ல பவுலர். நேற்று அவருக்கான நாளாக அது அமையவில்லை என்று முஹம்மது கெயிப் அறிவுரை வழங்கினார்.

Story first published: Saturday, January 28, 2023, 13:51 [IST]
Other articles published on Jan 28, 2023
English summary
Sanjay bangar and mohammed kaif advice to arshdeep singh bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X