சிஏஏ குறித்த சனாவின் பதிவு... உண்மையில்லை என கங்குலி மறுப்பு

குடியுரிமை சட்டத்தில் திருத்தத்திற்கு எதிராக கொந்தளித்த கங்குலியின் மகள்

சென்னை : குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது மகள் பகிர்ந்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் அரசியல் குறித்து விமர்சிக்கும் அளவிற்கு அவருக்கு வயதில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடெங்கிலும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கங்குலியின் மகள் சனா கங்குலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பதிவு ஒன்றை செய்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

சனா கங்குலியின் பதிவு

சனா கங்குலியின் பதிவு

பிசிசிஐ தலைவர் கங்குலியின் மகள் சனா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பதிவு ஒன்றை போட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

குஷ்வந்த் சிங் புத்தகத்தின் பகுதி

குஷ்வந்த் சிங் புத்தகத்தின் பகுதி

குஷ்வந்த் சிங் எழுதியுள்ள தி எண்ட் ஆப் இந்தியா என்ற புத்தகத்தின் ஒரு பகுதியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனா கங்குலி பகிர்ந்ததாகவும், அது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இடுகை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

பலவிதமான சர்ச்சை கருத்துக்கள்

பலவிதமான சர்ச்சை கருத்துக்கள்

சனா கங்குலியின் இந்த பதிவு வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

"இன்ஸ்டாகிராம் பதிவு உண்மையில்லை"

இந்நிலையில், சனா கங்குலி பகிர்ந்ததாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் பதிவு உண்மையானதில்லை என்று சவுரவ் கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அரசியல் பற்றி பேச வயதில்லை

தன்னுடைய மகள் சனா வயதில் மிகவும் இளையவர் என்றும், அரசியல் குறித்து பேசுவதற்கு அவருக்கு வயதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சினையில் இருந்து சனாவை விடுவிக்கவும் கோரினார்.

நாடு முழுவதும் போராட்டம்

நாடு முழுவதும் போராட்டம்

2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Sourav Ganguly says that His daughter sana's post on CAA is not True
Story first published: Thursday, December 19, 2019, 14:56 [IST]
Other articles published on Dec 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X