For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்காட்லாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி: ஹாங்காங் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

By Karthikeyan

நாக்பூர்: உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஸ்காட்லாந்து ஆறுதல் வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் இடையிலான முதலாவது சுற்று லீக் ஆட்டம் நடந்து வருகிறது. இதில் நாக்பூரில் நேற்று இரவு நடந்த 'பி' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட ஹாங்காங்-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

Scotland beat Hong Kong by 8 wickets

டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தன்விர் அப்சல் தலைமையிலான ஹாங்காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டும் எடுத்தது. கடைசி ஓவரில் குறுக்கிட்ட மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. 45 நிமிட தாமதத்துக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.

'டக்-வொர்த்' லீவிஸ் முறைப்படி ஸ்காட்லாந்து அணிக்கு 10 ஓவர்களில் 76 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஹாங்காங் அணியைத் தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து அணி வேகமாக ரன் குவித்து. அந்த அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, March 13, 2016, 3:32 [IST]
Other articles published on Mar 13, 2016
English summary
world cup t20 cricket: Scotland beat Hong Kong by 8 wickets
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X