சீனியர் பிளேயர் இல்லாதது தோல்வியின்போதுதான் புரியும்!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

வதோதரா: அனுபவம் பேசும் என்பது விளையாட்டு உலகில் பலமுறை நிரூபிககப்பட்டுள்ளது. அதில் லேட்டஸ்ட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடிய போட்டியை கூறலாம்.

தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-1 என வென்றது. இதன் மூலம் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் இரண்டு தொடர்களை வென்ற புதிய சாதனையைப் படைத்தது.

Seniors absence felt

அதைத் தொடர்ந்து, ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒருதினப் போட்டித் தொடர் துவங்கியுள்ளது.

வதோதராவில் நடக்கும் இந்த மூன்று போட்டித் தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. காயம் காரணமாக, சீனியரான ஜூவான் கோஸ்வாமி இந்தத் தொடரில் விளையாடவில்லை. இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் மிதாலி ராஜ் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை.

கடந்தாண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதியில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 200 ரன்கள் மட்டுமே குவித்தது.

முதல் வரிசை வீராங்கனைகள் பெரிதாக சோபிக்காத நிலையில், எட்டாவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் குவித்த சுஷ்மா வர்மா, 51 ரன்கள் எடுத்த பூஜா வஸ்த்ராகர் ஜோடி 76 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜெஸ் ஜோனாசன் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 32.1 ஓவர்களில், 2 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி பெற்றது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிகோல் போல்டான், 101 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். அனுபவமிக்க எல்லிஸ் பெர்ரி ஆட்டமிழக்காமல், 25 ரன்கள் எடுத்தார்.

பவுலிங் மற்றும் பேட்டிங்கில் மட்டுமல்லாமல், அணியை வழி நடத்துவதில் சீனியர் வீராங்கனைகள் இல்லாதது நேற்றைய போட்டியில் மிகவும் உணரப்பட்டது.

Story first published: Tuesday, March 13, 2018, 11:22 [IST]
Other articles published on Mar 13, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற