For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷமி வேகத்தில் ரெண்டாக உடைந்த ஸ்டெம்பு.. குக்கின் திக்.. திக் நிமிடங்கள்! #Shami

By Veera Kumar

விசாகபட்டினம்: இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் விக்கெட்டை வித்தியாசமாக வீழ்த்தினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 455 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்தது. வலுவான தொடக்கம் அந்த அணிக்கு தேவைப்பட்டது. முதலிலேயே முதுகெலும்பை உடைக்க வேண்டிய வெறியில் இந்திய பவுலர்கள் இருந்தனர்.

முகமது ஷமியும், உமேஷ் யாதவும், புது பந்தை வீச ஆரம்பித்தனர். மூன்றாவது ஓவரை முகமது ஷமி வீசியபோது, இங்கிலாந்து கேப்டனான இடக்கை பேட்ஸ்மேன் அலிஸ்டர் குக் அதை எதிர்கொண்டார். முதல் இரு பந்துகளையும் அவுட்-ஸ்விங்காக வீசினார் சமி. அதை அப்படியே போகவிட்டார் குக். கீப்பர் சாஹா அவ்விரு பந்துகளையும் பிடிக்க வேண்டிவந்தது.

இந்த நிலையில் மூன்றாவது பந்தை சற்று ஓவர் பிட்சில் வீசினார் ஷமி. அதுவும் அவுட்-ஸ்விங்காக போகும் என நினைத்த குக், அப்படியே அதை கீப்பரிடம் விடலாம் என முதலில் யோசித்தார். ஆனால் ஷமியோ சர்ப்ரைசாக அந்த பந்தை இன்-ஸ்விங் செய்திருந்தார். பந்து பிட்ச்சாகி, உள் நோக்கி வருவதை நொடிப்பொழுது தாமதமாக உணர்ந்தார் குக். பேட்டால் பந்தை இடைமறிக்க அவர் முயன்றபோதிலும், மணிக்கு 143 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்தை தடுக்க முடியவில்லை.

பந்து குக்கின் ஆப் ஸ்டம்ப்பில் பட்டது. பட்ட வேகத்தில் ஸ்டம்பு இரண்டாக உடைந்து, பறந்தது. வேகப்பந்து வீச்சாளர் காண விரும்பும் காட்சி அது. உற்சாகத்தில் குதித்தார் ஷமி. இதைத்தான் நானும் எதிர்பாரத்தேன் என கொக்கரித்தார் கோஹ்லி.

Story first published: Friday, November 18, 2016, 13:39 [IST]
Other articles published on Nov 18, 2016
English summary
Shami broke cook stump at England's first innings which the photo goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X