For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் போட்டிகளில் யார், யாரெல்லாம் ஆரஞ்சு தொப்பி வென்றார்கள்? #IPLTurns10

By Siva

பெங்களூரு: ஐபிஎல் போட்டிகளில் ஆரஞ்சு தொப்பியை இதுவரை மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 9 ஆண்டுகளில் 6 அணிகள் கோப்பையை வென்றுள்ளன. ஐபிஎல் போட்டிகள் துவங்கப்பட்ட ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பி கொடுக்கப்படுகிறது. முதல் சீசனில் 616 ரன்கள் எடுத்த ஷான் மார்ஷுக்கு ஆரஞ்சு தொப்பி கிடைத்தது. சச்சின் தவிர்த்து ராபின் உத்தப்பா(2014) மற்றும் கோஹ்லி(2016) ஆகிய இரண்டு இந்தியர்கள் மட்டுமே ஆரஞ்சு தொப்பியை பெற்றுள்ளனர். இதுவரை ஆரஞ்சு தொப்பி வென்றவர்களின் பட்டியல்,

கோஹ்லி(ஆர்சிபி, 2016)

கோஹ்லி(ஆர்சிபி, 2016)

கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடிய விராட் கோஹ்லி 4 சென்ச்சுரிகள் அடித்தார். கடந்த சீசனில் அவர் 973 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். இருப்பதிலேயே கோஹ்லி தான் அதிகபட்சமாக 973 ரன்கள் எடுத்து தொப்பியை பெற்றார்.

வார்னர் (எஸ்ஆர்ஹெச், 2015)

வார்னர் (எஸ்ஆர்ஹெச், 2015)

2015ம் ஆண்டில் டேவிட் வார்னர் 14 போட்டிகளில் 562 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை பெற்றார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான வார்னரின் ஸ்டிரைக் ரேட் 156 ஆக இருந்தது.

ராபின் உத்தப்பா(கேகேஆர் 2014)

ராபின் உத்தப்பா(கேகேஆர் 2014)

2014ம் ஆண்டில் 16 போட்டிகளில் 660 ரன்கள் எடுத்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ராபின் உத்தப்பாவுக்கு ஆரஞ்சு தொப்பி கிடைத்தது.

மைக்கேல் ஹஸி(சிஎஸ்கே, 2013)

மைக்கேல் ஹஸி(சிஎஸ்கே, 2013)

2013ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மைக்கேல் ஹஸி 17 போட்டிகளில் 733 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

கிறிஸ் கெய்ல்(ஆர்சிபி, 2012)

கிறிஸ் கெய்ல்(ஆர்சிபி, 2012)

2012ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆரஞ்சு தொப்பியை வென்றார். அவர் 15 போட்டிகளில் 733 ரன்கள் எடுத்தார்.

கெய்ல்

கெய்ல்

கிறிஸ் கெய்ல் முதல் முறையாக 2011ம் ஆண்டு ஆரஞ்சு தொப்பியை பெற்றார். 2011ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு முதல் முறையாக விளையாடத் துவங்கிய அவர் 608 ரன்கள் எடுத்தார்.

சச்சின் டெண்டுல்கர் (எம்ஐ, 2010)

சச்சின் டெண்டுல்கர் (எம்ஐ, 2010)

ஆரஞ்சு தொப்பி பெற்ற முதல் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 2010ம் ஆண்டில் 15 போட்டிகளில் 618 ரன்கள் எடுத்து தொப்பியை கைப்பற்றினார்.

மேத்யூ ஹேடன்(சிஎஸ்கே, 2009)

மேத்யூ ஹேடன்(சிஎஸ்கே, 2009)

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ ஹேடன் 2009ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியபோது ஆரஞ்சு தொப்பியை பெற்றார். அவர் 12 போட்டிகளில் 572 ரன்கள் எடுத்தார்.

ஷான் மார்ஷ்(கிங்ஸ் XI பஞ்சாப், 2008)

ஷான் மார்ஷ்(கிங்ஸ் XI பஞ்சாப், 2008)

ஐபிஎல் போட்டிகள் துவங்கப்பட்ட 2008ம் ஆண்டில் பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் 11 போட்டிகளில் 616 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை பெற்றார்.

Story first published: Friday, April 21, 2017, 12:03 [IST]
Other articles published on Apr 21, 2017
Read in English: Orange Cap winners in IPL
English summary
Starting its journey in 2008, the Indian Premier League (IPL) has entered the 10th season this year. We already have 6 different champions in the last 9 years. The Orange Cap which is given to the highest run scorer of a particular season has switched hands several times in the last 9 seasons.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X