அடப்பாவமே, நியூசி. கிரிக்கெட் வீரருக்கும் ஆதார் கார்டு அவசியமா?

Posted By:

திருவனந்தபுரம்: இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நியூசிலாந்து அணி வீரர் ரோஸ் டெய்லருக்கும், சேவாக்கிற்கும் டிவிட்டரில் நிறைய விவாதம் நடந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலான விவாதம் அவர் பெயர் குறித்தே இருக்கிறது.

தற்போது ரோஸ் டெய்லருக்கு ஆதார் கார்ட் வழங்கும்படி சேவாக் ஆதார் அமைப்பிடம் காமெடியாக கோரிக்கை விடுத்து இருக்கிறார். அவரின் அந்த டிவிட்டுக்கும் ஆதார் அமைப்பு சீரியஸாக பதிலும் கூறியிருக்கிறது.

அதிரடி வீரர் ரோஸ் தையல்காரன்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் மிகவும் சிறப்பாக ஆடினார். இந்த போட்டியில் அவர் 100 பந்துகளில் 95 ரன்கள் அடித்தார். அப்போது இந்திய வீரர் சேவாக் அவரை பாராட்டி டிவிட் செய்து இருந்தார். அதில் 'டார்ஜி' என்று குறிப்பிட்டு இருந்தார். ஹிந்தியில் டார்ஜி என்றால் தையல்காரர் என்றும் அர்த்தம். ரோஸ் டெய்லரில் இருக்கும் டெய்லர் என்ற வார்த்தையை கலாய்த்து அவர் அப்படி எழுதினார்.

தவறாக எழுதப்பட்ட பெயர்

இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் தங்குவதற்காக கான்பூரில் அளிக்கப்பட்ட ஹோட்டலின் பெயர் பலகையில் ரோஸ் டெய்லரின் பெயர் தவறாக இடம் பெற்றிருந்தது. அதில் அவரது டெய்லர் என பெயருக்கு பதிலாக டெலர் என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து குழப்பம் அடைந்த டெய்லர், இந்திய வீரர் சேவாக்கை இன்ஸ்ட்டாகிராமில் மென்சன் செய்து "என்னோட பெயரை ஒவ்வொரு தடவையும் உங்க ஊர்ல தப்பாவே சொல்லுறாங்க. எனக்கு ஒரு உதவி பண்ணுங்க, என்னோட பெயரை உங்க ஊர்ல எப்படி சொல்லுவாங்கன்னு சொல்லி தாங்க'' என்று காமெடியாக எழுதியிருக்கிறார்.

தையல் கடையில் டெய்லர்

இந்த நிலையில் தற்போது டெய்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். திருவனந்தபுரத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக பயிற்சியில் இருக்கிறார் அவர். அப்போது அங்கு இருந்த ஒரு துணிக்கடையின் முன்பு போட்டோ எடுத்து "கான்பூர் போட்டில துணிய எல்லாம் தச்சிட்டு இப்ப கேரளாவுக்கு துணி தைக்க வந்து இருக்கேன்'' என காமெடியாக கூறினார்.

ஹிந்தியில் பதில் அளித்த டெய்லர்

அவர் அந்த போஸ்டை ஹிந்தியில் எழுதி இருந்தார். இதையடுத்து சேவாக் அதற்கு பதில் சொல்லும் விதமாக டிவிட்டரில் ''உங்க ஹிந்தி ரொம்ப அழகா இருக்கு. ஆதார் நிறுவனமே இவருக்கு ஆதார் கார்ட் கொடுப்பீங்களா'' என்று ஆதார் நிறுவனத்தையும் டேக் செய்து கேட்டு இருந்தார்.

பதில் அளித்த ஆதார்

இந்த நிலையில் காமெடியான இவரது கேள்விக்கு ஆதார் நிறுவனம் பதில் அளித்து இருக்கிறது. அதில் "மொழிலாம் பிரச்சனையே இல்ல. ஆனால் இந்திய குடிமகனுக்கு மட்டும் தான் ஆதார் தருவோம்'' என்று கூறினார். இதையடுத்து ஆதரின் டிவிட்டர் ஐடியில் அனைவரும் காமெடியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, November 7, 2017, 12:51 [IST]
Other articles published on Nov 7, 2017
Please Wait while comments are loading...