சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. நிலவுக்கு மேலே மிதக்கும் ஷோயப் மாலிக்

நியூ டெல்லி : இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதை சானியா மிர்சாவின் கணவர் ஷோயப் மாலிக், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தன் ட்விட்டர் பதிவில் அறிவித்தார்.

தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் பிரபலங்களும், இந்திய விளையாட்டு உலகிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஆண் குழந்தை பிறந்தது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் வெளியிட்ட ட்வீட்டில், "இதை அறிவிக்க உற்சாகமாக இருக்கிறது. ஆண் குழந்தை. என் மனைவி நன்றாக இருக்கிறார். எப்பொழுதும் போல வலுவாக இருக்கிறார்" என கூறி இருக்கிறார்.

நிலவுக்கு மேலே மாலிக்

ஷோயப் மாலிக் அறிவிக்கும் முன்பாகவே அவரது மேலாளர் அமீம் ஹக் மாலிக் - மிர்சா தம்பதிக்கு குழந்தை பிறந்த தகவலை தெரிவித்து விட்டார். "பையன் இங்கே இருக்கிறான். குழந்தையும், தாயும் முழுவதும் புன்னகையுடன், தந்தையோ நிலவுக்கு மேலே இருக்கிறார்" என பதிவிட்டார். இந்த பதிவின் மூலமே குழந்தை பிறந்த தகவல் ஊடகங்களில் பரவியது. அடுத்து மாலிக் வெளியிட்ட பதிவும் வெளியாக செய்தி உறுதியானது.

பெயரில் மிர்சா மாலிக்

பெயரில் மிர்சா மாலிக்

2010-இல் ஷோயப் மாலிக், சானியா மிர்சா திருமணம் நடைபெற்றது. அதற்கடுத்து அவர்கள் தங்கள் முதல் குழந்தையை தற்போது பெற்றெடுத்து உள்ளனர். சானியா மிர்சா முன்பு ஒருமுறை மாலிக்கிடம் கூறுகையில், தங்களுக்கு குழந்தை பிறந்தால் குழந்தையின் பெயரோடு தந்தை பெயரான மாலிக் மட்டுமல்லாமல், தாயின் பெயரான மிர்சா என்பதையும் சேர்த்து "மிர்சா மாலிக்" என்றே அழைக்க வேண்டும் என கூறி இருக்கிறார். மாலிக் தன் ட்விட்டர் பதிவில் #BabyMirzaMalik என்றே பதிவிட்டுள்ளார்.

யானை பொம்மை டிரஸ் போட்டுக் கொண்டு சானியா கொண்டாடிய பார்ட்டி.. படங்கள் இதோ

மீண்டும் களத்தில் சானியா மிர்சா

மீண்டும் களத்தில் சானியா மிர்சா

ஷோயப் மாலிக் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்று விட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார். குழந்தைப் பேறு காரணமாக டென்னிஸ்-இல் இருந்து விலகி இருந்த சானியா மிர்சா சில காலம் கழித்து மீண்டும் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் செயல்படுவார் எனவும் முன்பு தெரிவித்து இருந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Shoaib malik - Sania mirza became parents of a baby boy
Story first published: Tuesday, October 30, 2018, 10:40 [IST]
Other articles published on Oct 30, 2018
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X