For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க டீம்ல புகைச்சல் இருப்பது உண்மை... ஒருவழியாக ஒத்துக்கொண்ட கேகேஆர் பயிற்சியாளர் கேடிச்

Recommended Video

திட்டு விட்ட தினேஷ் கார்த்திக்! முகத்தை காட்டிய நரைன், உத்தப்பா

கொல்கத்தா:கொல்கத்தா அணி வீரர்களுக்குள் பிரச்னை இருப்பது உண்மை தான் என்று அந்த அணியின் பயிற்சியாளர் சைமன் கேடிச் ஒத்துக் கொண்டு இருக்கிறார்.

ஐபிஎல் தொடர் ஒரு வழியாக முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிந்து தகுதிச்சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

Simon katich admits tension in kolkata knight riders camp

நடப்பு ஐபிஎல் சீசனை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி ஒரு கட்டத்தில் சொதப்பி, ஒரு வழியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி உள்ளது. அதற்கு காரணம், 2ம் பாதியில் படுமோசமாக சொதப்பியது தான்.

முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை குவித்த கொல்கத்தா, அடுத்த 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. லீக் சுற்றின் கடைசி போட்டியில் வெற்றி கட்டாயத்துடன் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட கேகேஆர் அணி, பவுலிங், பேட்டிங் என அனைத்திலுமே படுமோசமாக செயல்பட்டு தோல்வியடைந்தது.

VIDEO:இவர் தான் ஜூனியர் இம்ரான் தாஹிர்... உருவாகிறது அடுத்த வாரிசு.. வைரல் வீடியோ VIDEO:இவர் தான் ஜூனியர் இம்ரான் தாஹிர்... உருவாகிறது அடுத்த வாரிசு.. வைரல் வீடியோ

ஆண்ட்ரூ ரசலின் கருத்து, போட்டியில் வீரர்களை கேப்டன் தினேஷ் கார்த்திக் திட்டியது என ஏற்கனவே அந்த அணியில் பிரச்னைகள் இருந்துள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடு மும்பை அணியுடனான முக்கிய போட்டியில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், அணியில் ஒருங்கிணைப்பு இல்லை என்பது பயிற்சியாளர் சைமன் கேடிச்சும் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:கடந்த சில போட்டிகளில் அணியில் ஒற்றுமை இல்லை என்பதை உணர முடிந்தது. அது உண்மை தான். பிரச்னை இருப்பதை மறைக்கவெல்லாம் முடியாதுஎன்று கூறியிருக்கிறார்.

Story first published: Monday, May 6, 2019, 13:56 [IST]
Other articles published on May 6, 2019
English summary
Simon katich admits tension in kolkata knight riders camp.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X