For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரு தான்..!! அந்த மனுசரால தான் நான் பவுலிங்கையே நிறுத்திட்டேன்…!! பொங்கி தள்ளிய கோலி

லண்டன்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை நிறுத்தி யதற்கு பும்ரா தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடரில், இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை நாளை சந்திக்கிறது. நாளைய போட்டி தென் ஆப்ரிக்காவுக்கு 3வது போட்டி. ஆனால் ஒரு வெற்றியைக்கூட இன்னும் பதிவுசெய்யவில்லை.

வெற்றியுடன் தொடரை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று தென் ஆப்ரிக்காவும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. அதனால், இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 ஒரே போட்டியில் நடந்த 3 ஆச்சர்ய சம்பவங்கள்.. வீடியோ வெளியிட்டு புகழ்ந்த ஐசிசி.. ஏன்? ஒரே போட்டியில் நடந்த 3 ஆச்சர்ய சம்பவங்கள்.. வீடியோ வெளியிட்டு புகழ்ந்த ஐசிசி.. ஏன்?

 கோலிக்கு 4 விக்.

கோலிக்கு 4 விக்.

2017ம் ஆண்டுக்குப் பின்னர், இந்திய அணியின் கேப்டன் கோலி சர்வதேச போட்டிகளில் பந்துவீசவில்லை. கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். பேட்டிங்கில் கெத்தான சாதனைகளை படைத்திருக்கும் கோலி, பந்து வீச்சிலும் கலக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

 வெளிவந்த உண்மை

வெளிவந்த உண்மை

இப்போது அதையே கொஞ்சம் வேறு தொனியில் பேசியிருக்கிறார். தமது பவுலிங் யாரால் நிறுத்தப்பட்டது என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் டெல்லி அகாடமியில் பயிற்சியில் இருந்த போது, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசுவது போல பந்து வீச முயல்வேன்.

 வாய்ப்பு கிடைத்தது

வாய்ப்பு கிடைத்தது

பின்னர் நாட்கள் செல்லச் செல்ல, அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்த விஷயத்தை அவரிடம் நான் சொல்லி இருக்கிறேன். 2017ம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதில்லை. அது ஒரு இலங்கைத் தொடர். அந்தப் போட்டியில் அனைத்தையும் வென்று விட்டோம்.

 பும்ராவின் கருத்து

பும்ராவின் கருத்து

அந்த நிலையில், நான் தோனியிடம் சென்று பந்து வீசலாமா எனக் கேட்டேன். அவரும் அனுமதித்தார். நான் பந்து வீச தயாரானேன். அப்போது, எல்லை பகுதியில் இருந்த பும்ரா, இது ஜோக் அல்ல.. சர்வதேசப் போட்டி என்றார். அதன்பின்னர் எனக்கும் முதுகில் சில பிரச்னைகள் இருந்தது. அதனால், பந்து வீசுவதில்லை. சக வீரர்களுக்கு எனது பந்துவீச்சில் உடன்பாடே கிடையாது என்றார்.

Story first published: Tuesday, June 4, 2019, 13:38 [IST]
Other articles published on Jun 4, 2019
English summary
Skipper kohli reveals bumrah related incident ended his international bowling career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X