For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாதனை வெற்றி.. மிதாலி ராஜ் சதம் வீண்

கட்டுநாயகே: ஐசிசி மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்ற நிலையில் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களை எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 51 ரன்களை எடுத்தார். கேப்டன் மிதாலி ராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களை எடுத்தார்.

SL women team beats indian women team after 5 years


அதனை தொடர்ந்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 257 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் அட்டப்பட்டு அபாரமாக விளையாடி 115 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி மற்றும் மன்சி ஜோஷி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த 2013ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தது.

மேலும் இது ஒருநாள் போட்டிகளில் இலங்கை பெண்கள் அணி சேஸ் செய்த அதிகபட்ச ரன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Story first published: Monday, September 17, 2018, 10:36 [IST]
Other articles published on Sep 17, 2018
English summary
SL women team beats indian women team after 5 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X