For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஆண்டில் இரண்டு ஐசிசி விருதுகளை அள்ளிய ஸ்மிருதி மந்தனா.. திறமைக்கு கிடைத்த பரிசு

துபாய் : 2018ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருது வென்றார் ஸ்மிருதி மந்தனா. மேலும், சிறந்த டி20 வீராங்கனை விருதையும் வென்று இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஐசிசி 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை விருதுகளை அறிவித்தது. அதில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஸ்மிருதி மந்தனா இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.

[2018 பிளாஷ் பேக்]

இந்திய மகளிர் அணி முன்னேற்றம்

இந்திய மகளிர் அணி முன்னேற்றம்

இந்திய மகளிர் அணி 2018இல் பல உயரங்களை தொட்டது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வரை தகுதி பெற்றது. டி20 உலகக்கோப்பை அரையிறுதி வரை முன்னேறி பின் வெளியேறியது. இப்படி முக்கிய தொடர்களில் முன்பைக் காட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.

அதிரடி காட்டிய மந்தனா

அதிரடி காட்டிய மந்தனா

இந்திய அணியில் அதிரடி வீராங்கனையாக உருவெடுத்தார் ஸ்மிருதி மந்தனா. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீராங்கனையாக களமிறங்கி எதிரணியை கதிகலங்க வைத்தார். அதற்கான பலனாக தற்போது ஐசிசி சிறந்த வீராங்கனை விருது வென்றுள்ளார்.

மந்தனா அடித்த ரன்கள்

மந்தனா அடித்த ரன்கள்

2018இல் மந்தனா 12 ஒருநாள் போட்டிகளில் ஆடி 669 ரன்கள் எடுத்துள்ளார் இதன் சராசரி 66.90 ஆகும். 25 டி20 போட்டிகளில் ஆடி 622 ரன்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 130.67 ஆகும்.

சிறந்த டி20 வீராங்கனை யார்?

சிறந்த டி20 வீராங்கனை யார்?

ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி சிறந்த டி20 வீராங்கனை என்ற பட்டத்தை தட்டிச் சென்றார். இங்கிலாந்தின் சோஃபி எக்கலஸ்டோன் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை என்ற பட்டத்தை வென்றார்.

Story first published: Monday, December 31, 2018, 17:14 [IST]
Other articles published on Dec 31, 2018
English summary
Smiriti Mandhana named as ICC Women’s cricketer and ODI player of the year. Harmanpreet Kaur named as Captain of ICC T20 team of 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X