For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஸ்டீவன் ஸ்மித்!

ஆஷஸ் தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார் ஸ்மித்.

By Dakshinamurthy

ஆஸ்திரேலியா: "பாக்சிங் டே" டெஸ்ட் மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. இன்று நிறைவடைந்த இந்த டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் டான் பிராட்மேன் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் இருந்தது.

Smith equals don Bradman's record

இந்நிலையில் "பாக்சிங் டே" டெஸ்ட் மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த ஸ்மித், 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸி. 263 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடிக்க இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர். ஸ்மித் 102 ரன்களுடன் களத்தில் நின்றார்.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மெல்போர்ன் டெஸ்டில் நான்கு சதங்களை விளாசிய வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்தார்.

பிராட்மேன் 1928 முதல் 1931 வரை 112, 123, 152 மற்றும் 167 ரன்கள் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் 192, 134 நாட்அவுட், 165 நாட்அவுட் மற்றும் 102 (நாட்அவுட்) ரன்கள் அடித்து பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதேபோல கேப்டனாக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 15 சதங்களுடன் ஆலன் பார்டர் மற்றும் ஸ்டீவ் வாக் உடன் ஸ்மித் இணைந்துள்ளார்.

Story first published: Saturday, December 30, 2017, 19:51 [IST]
Other articles published on Dec 30, 2017
English summary
Smith equals don bradmans record by his tremendous centuries in the boxing day match which took place in Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X