For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்த்தால் மயில்..! பாய்ந்தால் புலி..! இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவாவின் அசத்தல் கேட்ச் வீடியோ

குயின்ஸ்டவுன்: பாலிவுட் நட்சத்திரங்களுக்கே போட்டி போடும் அளவுக்கு அழகு, வசிகர தோற்றம், ஆனால் உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை

ஐசிசியின் சிறந்த மகளிர் வீராங்கனை என 2 முறை பட்டம், டெஸ்டில் சதம் என கலக்கி வரும் ஸ்மிருதி மந்தனாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

3 பந்துக்கு 3 சிக்சர் தேவை.. 11 பேரும் காட்டு மிராண்டிகள்..! இறுதியில் நடந்தது என்ன? பரபர நொடிகள்3 பந்துக்கு 3 சிக்சர் தேவை.. 11 பேரும் காட்டு மிராண்டிகள்..! இறுதியில் நடந்தது என்ன? பரபர நொடிகள்

இந்த நிலையில், ஸ்மிருதி மந்தானா நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது குவாரண்டனில் இருந்ததால் பல்வேறு போட்டியில் பங்கேற்காமல் இருந்தார்.

குவாரண்டைன்

குவாரண்டைன்

ஸ்மிருதி மந்தானாவுக்கு கொரோனா தொற்று எற்பட்டதா என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அவர் உள்ளிட்ட 3 வீராங்கனைகள் மட்டும் நியூசிலாந்து அரசின் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டாய குவாரண்டைன் விதியில் இருந்தனர்.

உலககோப்பை தொடர்

உலககோப்பை தொடர்

இந்த நிலையில், மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி நியூசிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் வரும் 6ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

இந்த தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய மகளிர் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 1 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற ஒரு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது இந்த நிலையில், குயின்ஸ்டவுனில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தானா முதல் முறையாக களமிறங்கினார்.

அபாரமான கேட்ச்

அபாரமான கேட்ச்

இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் களமிறங்கவில்லை. மழையால் ஆட்டம் 20 ஓவராக குறைக்கப்பட்டது. அப்போது,டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து பேட்டிங்கின் போது டிவைன் 32 ரன்கள் எடுத்திருந்த போது அடித்த பந்தை பாயிண்ட் பகுதியில் நின்ற மந்தானா அபாரமாக பாய்ந்து பிடித்தார். மந்தானாவின் இந்த கேட்ச் தற்போது வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, February 22, 2022, 11:18 [IST]
Other articles published on Feb 22, 2022
English summary
Smrithi Mandhana Brilliant catch in newzealand odi series பார்த்தால் மயில்..! பாய்ந்தால் புலி..! இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவாவின் அசத்தல் கேட்ச் வீடியோ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X