For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சிங்கிள் டெஸ்ட்"... புலி போல பாய்ந்து வென்ற தெ. ஆ... சிங்கமாக கர்ஜித்து சமாளித்த ஜிம்பாப்வே!

ஹராரே: தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியாகும் இது. ஹராரே நகரில் நடந்த இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது, ஜிம்பாப்வேயை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றாலும் கூட ஜிம்பாப்வே வீரர்கள் தங்களது திறமையான சமாளிப்பு மற்றும் போராட்டத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தனர்.

சுருண்ட ஜிம்பாப்வே:

சுருண்ட ஜிம்பாப்வே:

போட்டியில் முதலில் ஜிம்பாப்வே பேட்டிங் செய்தது. அதில் 92.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்த ஜிம்பாப்வே 256 ரன்கள் எடுத்தது.

டெய்லர் 93:

டெய்லர் 93:

ஜிம்பாப்வே அணியின் பிஆர்எம் டெய்லர் 93 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேபோல மஸகட்ஸா 45 ரன்கள் எடுத்தார்.

சுழன்று ஆடிய தென் ஆப்ரிக்கா:

சுழன்று ஆடிய தென் ஆப்ரிக்கா:

தென்ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 5 விக்கெட்களையும், டேன் பீட் 4 விக்கெட்டுகளும் வீ்ழ்த்தினர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள், முதல் இன்னிங்ஸில் 397 ரன்களைக் குவித்தனர். டூபிளஸிஸ் 98 ரன்களும், குவின்டான் டி காக் 81 ரன்களும் குவித்தனர். எல்கர், டுமினி ஆகியோரும் அரை சதம் அடித்தனர்.

நியும்பு அபாரம்:

நியும்பு அபாரம்:

ஜிம்பாப்வே வீரர் நியும்பு சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார்.

ஜிம்பாப்வே 181:

ஜிம்பாப்வே 181:

பின்னர் ஜிம்பாப்வே அணி தனது 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தில் 181 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் பீட்:

ஆட்ட நாயகன் பீட்:

புதுமுக சுழற்பந்து வீச்சாளரான டேன் பீட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அறிமுக டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் பெற்றார்.

Story first published: Wednesday, August 13, 2014, 11:45 [IST]
Other articles published on Aug 13, 2014
English summary
South Africa won a one-off Test against Zimbabwe by nine wickets on the fourth day in Harare.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X