For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச இடதுகையாளர் தினத்தில், சதம் அடித்து சாதித்த இடதுகை பேட்ஸ்மேன் தவான்

By Veera Kumar

கொழும்பு: சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினமான இன்று, இந்திய அணியின் இடக்கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் சதம் விளாசியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 183 ரன்களில் சுருண்டது. 2வது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் இன்று சதம் கடந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 53 ரன்கள் கடந்த தவான், இன்று உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் கடந்தார்.

Southpaw Shikhar Dhawan hits Test ton on International Left-Handers Day

29 வயதாகும் தவானுக்கு இது 4வது டெஸ்ட் சதமாகும். தவானின் சதத்தால், இந்தியா தனது முதல் இரு விக்கெட்டுகளை மளமளவென இழந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

இதில் என்ன ஒரு ஒற்றுமையென்றால், இன்றுதான் சர்வதேச இடதுகை பழக்கமுடையோருக்கான நாளாகும். தவானும் இடக்கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 13, 2015, 13:19 [IST]
Other articles published on Aug 13, 2015
English summary
India's left-handed opening batsman Shikhar Dhawan scored a century on International Left-Handers Day today (August 13) against Sri Lanka. Resuming from his overnight score of 53, Dhawan brought up his 4th Test ton on the 2nd day of the 1st Test against the islanders. India continued to dominate as they took lead in the 1st innings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X