For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபியால் ரகசியத்தை அறிந்த ஆஸி.. போலி அஸ்வினுக்கும் அழைப்பு.. பெங்களூரு பயிற்சிக்கு காரணம் இதுதான்

பெங்களூரு : இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அணி இம்முறை கடுமையாக பிளான் செய்து வந்துள்ளார்கள்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, நாக்பூர், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத் ஆகிய 4 மைதானங்களில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணி பெங்களூருவில் பயிற்சி முகாம் அமைத்தது ஏன் என்று பலரும் யோசித்து வந்தனர். அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா

பெங்களூரு ஏன்?

பெங்களூரு ஏன்?

பெங்களூருவை அடுத்த ஆலுர் என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஆடுகளங்கள் அனைத்தும் சுழற்பந்துவீச்சுக்கு தகமான மைதானம் ஆகும். இந்திய வீரர்கள் யாராவது சுழற்பந்துவீச்சுக்கு தயாராக வேண்டும் என்றால், இங்கு வந்து தான் பயிற்சி செய்வார்களாம். ஆர்சிபி அணி நிர்வாகமும், இங்கு பலமுறை பயிற்சி செய்து இருக்கிறார்கள்.

விசேஷ பயிற்சி

விசேஷ பயிற்சி

இந்த ரகசியத்தை ஆர்சிபி மூலம் தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள், எங்களுக்கு பெங்களூருவில் இந்த மைதானம் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார்கள். மேலும் இந்தியாவில் தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தை தவிர எந்த ஒரு வீரரும் டெஸ்ட் போட்டியில் 30க்கு மேல் சராசரி வைத்தது இல்லை.

போலி அஸ்வின்

போலி அஸ்வின்

இதனாலேயே சுழற்பந்துவீச்சுக்கு தயாராக, வலைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போன்று தமிழக வீரர் அஸ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலை அளிப்பார். அந்த அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்டை வீழ்த்துவது அஸ்வினுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்பதால், அதனை சமாளிக்கவும் ஆஸ்திரேலியா திட்டம் தீட்டியுள்ளது.

பலே திட்டம்

பலே திட்டம்

அதில், அஸ்வினை போலலே பந்துவீசும் பரோடாவை சேர்ந்த இந்திய வீரர் மகீஷ் பித்தையா ஸ்வினை போலவே பந்துவீச கூடியவர். இதனை இவரை 4 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க அழைத்துள்ள ஆஸ்திரேலிய அணி, அஸ்வினை போலவே பந்துவீச சொல்லி, அதனை எதிர்கொண்டு பழகி வருகிறார்கள்.

18 ஆண்டுகள்

18 ஆண்டுகள்

ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் கடந்த 18 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஆனால் இந்திய அணியோ, ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2 டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. இதனால் இம்முறை கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள ஆஸ்திரேலிய அணி, கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது,

Story first published: Friday, February 3, 2023, 14:30 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
Special training by Australia to tackle india spin challenges ஆர்சிபியின் ரகசியத்தை அறிந்த ஆஸி.. போலி அஸ்வினுக்கும் அழைப்பு.. பெங்களூரு பயிற்சிக்கு காரணம் இதுதான்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X