For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2019:இனி… நாய், பூனையோட நீங்க கிரிக்கெட்டை நேர்ல வந்து பாக்கலாம்.. என்னது?

பெங்களூரு: பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் உள்ளூர் ரசிகர்கள் தங்களின் செல்ல பிராணிகளுடன் ஐபிஎல் ஆட்டத்தை கண்டுகளிக்க பெங்களூரு அணி திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல்லில் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. கிரிக்கெட் ஆடும் பல நாடுகளில் 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டாலும் உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படுவது ஐபிஎல் தொடர் தான்.

கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் வரை நீடிக்கும் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். கடந்த 11 ஐபிஎல் சீசன்களை காட்டிலும் இந்த சீசன் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித் : அவரு அடிச்சு நொறுக்குற பேட்ஸ்மேன்.. அவர் கூட நான் பேட்டிங் செய்யப் போறேன் ஸ்டீவ் ஸ்மித் : அவரு அடிச்சு நொறுக்குற பேட்ஸ்மேன்.. அவர் கூட நான் பேட்டிங் செய்யப் போறேன்

புதுமைக்கு முயற்சி

புதுமைக்கு முயற்சி

அதற்கேற்ப அணி நிர்வாகத்தினரும் புதுமைகளை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதன்ஒரு பகுதியாக, பெங்களூரு அணி ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது.

டாக் அவுட் முறை

டாக் அவுட் முறை

அதாவது உள்ளூர் ரசிகர்களை கவர டாக் அவுட் முறை தான். டக் அவுட் தெரியும், அது என்ன டாக் அவுட் முறை என்கிறீர்களா?

செல்லப்பிராணிகளுக்கு வாய்ப்பு

செல்லப்பிராணிகளுக்கு வாய்ப்பு

அதாவது... இனி ரசிகர்கள் தங்களின் செல்லப்பிராணிகளுடன் மைதானத்துக்கு வந்து கிரிக்கெட் போட்டியை காண முடியும். அதற்கு தான் டாக் அவுட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தனியாக இருக்கைகள்

தனியாக இருக்கைகள்

அதற்காக தனியாக இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் ரசிகர்கள் தங்களின் நாய்களுடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டு களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மீது அக்கறை

ரசிகர்கள் மீது அக்கறை

இது குறித்து பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூரு அணி ரசிகர்கள் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது.

குடும்பத்தில் ஒருவர்

குடும்பத்தில் ஒருவர்

அதில் பெரும்பாலான ரசிகர்கள் செல்லப்பிராணிகளை விரும்புவர்கள் என்பது தெரியும். செல்ல பிராணிகளை தங்களின் குடும்பத்தில் ஒருவராக அவர்கள் கருதுகின்றனர்.

அணி நிர்வாகம் முடிவு

அணி நிர்வாகம் முடிவு

அதனால்... செல்லப்பிராணிகளுடன் போட்டியை கண்டுகளிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்டது தான் டாக்-அவுட் வசதி எனறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி கொண்டாட்டம்

இனி கொண்டாட்டம்

ஆக மொத்தத்தில் பெங்களூருவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இனி அவர்கள் செல்லப்பிராணிகளுடன் ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம்.

Story first published: Tuesday, March 19, 2019, 18:01 [IST]
Other articles published on Mar 19, 2019
English summary
Royal Challengers Bangalore have come up with an exclusive pet lounge named "DogOut" wherein spectators can watch IPL 2019 matches with their pets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X