For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'தூ'... அவுட்டானதை ஏற்க முடியாமல் காரித் துப்பியபடி வெளியேறிய கோஹ்லி!

ஹராரே: தான் அவுட் என்று நடுவர்கள் அறிவித்ததால் கோபமடைந்த இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, காரி உமிழ்ந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இன்று ஹராரேவில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியின்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.

இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான 2வது ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடந்தது. இதில் விராத் கோஹ்லி அவுட் செய்யப்பட்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தான் அதிருப்தியை வெளிப்படுத்தியபடி வெளியேறினார் கோஹ்லி.

7வது ஓவரில்

7வது ஓவரில்

இந்தியாவின் பேட்டிங்கின்போது 7வது ஓவரை கைல் ஜார்விஸ் வீசினார். அதில் 2வது பந்தை தூக்கி அடித்தார் கோஹ்லி. பந்து மிட் ஆனில் போனது. அதை மால்கம் வாலர் டைவ் அடித்துப் பிடித்தார். ஆனால் தான் அவுட்டானதை ஏற்கவில்லை கோஹ்லி.

3வது நடுவரிடம் பஞ்சாயத்து

3வது நடுவரிடம் பஞ்சாயத்து

இதையடுத்து 3வது நடுவரான ருஸ்ஸல் டிபினின் முடிவுக்கு விட்டார் பீல்ட் நடுவரான ஆஸ்திரேலியாவின் ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட்.

எத்தனை முறை பார்த்தாலும் புரியவில்லை...!

எத்தனை முறை பார்த்தாலும் புரியவில்லை...!

இதையடுத்து டிவி ரீப்ளேக்களை 3வது நடுவர் டிபின் திரும்பத் திரும்பப் பார்த்தார். ஆனால் முடிவை அறிவிக்க முடியாமல் தடுமாறினார்.

கோஹ்லி அதிர்ச்சி

கோஹ்லி அதிர்ச்சி

இதனால் கோஹ்லி அதிர்ச்சி அடைந்தார். மறுபடியும் மைதானத்தை விட்டு வெளியேறாமல் நின்று கொண்டிருந்தார். மேலும் இது அவுட்டா இல்லையா என்ற முடிவு பீல்ட் நடுவரிடமே விடப்பட்டது.

அம்பயரே.. நீங்க என்ன சொல்றீக!

அம்பயரே.. நீங்க என்ன சொல்றீக!

இதையடுத்து பீல்ட் நடுவர் ஆக்ஸன்போர்டிடம் பேசினார் கோஹ்லி. அவரோ அவுட்தான் என்று கூறி விட்டார்.

கடுப்புடன் தூ....!

கடுப்புடன் தூ....!

இதனால் கடும் அதிருப்தியடைந்த கோஹ்லி, கோபத்துடனும், அதிருப்தியுடனும் வெளியேறினார். போகும் போது காரித் துப்பியபடி அவர் போனதால் சலசலப்பும் ஏற்பட்டது.

தண்டனை கன்பர்ம்ட்...!

தண்டனை கன்பர்ம்ட்...!

கோஹ்லியின் செயல் தவறு என்று வர்ணிக்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியின் முடிவில் போட்டி நடுவர் கிறிஸ் பிராட், கோஹ்லிக்கு அபராதம் அல்லது தடை போன்ற ஏதாவது தண்டனை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராட் மகனே அப்படித்தானே போனார்...!

பிராட் மகனே அப்படித்தானே போனார்...!

ஆனால் கிறிஸ் பிராடின் மகன் ஸ்டூவர்ட் பிராடும் கூட இப்படித்தான் கோபத்தைக் காட்டியிருந்தார். ஆசஷ் தொடரின்போது பிராட் அடித்த பந்தை ஆஸ்திரேலிய பீல்டர் பிடித்தார். அது கேட்ச்சா இல்லையா என்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பிராட் மைதானத்தை விட்டு போகாமல் அடம் பிடித்தபடி நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 26, 2013, 16:06 [IST]
Other articles published on Jul 26, 2013
English summary
There was controversy early into the India-Zimbabwe second One Day International on Friday when captain Virat Kohli was given out by the third umpire after checking TV replays for a clean catch. On the second ball of the 7th over, Kohli (14) hit Kyle Jarvis' delivery to mid-on where Malcolm Waller dived ahead and took the catch. However, Kohli stood his ground and Australian umpire Bruce Oxenford asked the third umpire Russell Tiffin of Zimbabwe to check the TV replays.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X