For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த தடவை ஜோசியம் பார்த்துட்டு ரன் ஓடுங்கப்பா.. ஒரே பந்தில் ரன் அவுட்டான 2 பெங்களூர் வீரர்கள்!!

Recommended Video

IPL 2019: Vijay Shankar 2 runout | ஒரே பந்தில் ரன் அவுட்டான 2 பெங்களூர் வீரர்கள்!!

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

அந்த அணி படுதோல்வி அடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கும் நிலையில், அந்த அணியின் பேட்டிங்கின் போது நடத்த பொறுப்பற்ற, நகைச்சுவையான ரன் அவுட் சம்பவம் இவர்கள் தோல்வி அடைந்ததில் தவறே இல்லை என சொல்வது போல இருந்தது.

SRH vs RCB: ருத்ரதாண்டவமாடி 231 ரன்களை குவித்த ஹைதராபாத்.. 113 ரன்னில் சரண்டரான பெங்களூர் SRH vs RCB: ருத்ரதாண்டவமாடி 231 ரன்களை குவித்த ஹைதராபாத்.. 113 ரன்னில் சரண்டரான பெங்களூர்

இனி வாய்ப்பே இல்லை

இனி வாய்ப்பே இல்லை

ஹைதராபாத் - பெங்களூர் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்து மிரட்டியது. அடுத்து பேட்டிங் ஆட வந்த பெங்களூர் அணியின் வீரர்கள் சடசடவென ஆட்டமிழக்க, அந்த அணி 18 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து இருந்தது. இனி பெங்களூர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலை. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.

பாதி தூரம்..

பாதி தூரம்..

18வது ஓவரின் 4வது பந்தை நோ-பால் ஆக வீசினார் விஜய் ஷங்கர். அந்த பந்தை சந்தித்த சிராஜ், பந்தை தட்டி விட்டு, ஒரு ரன் ஓடத் துவங்கினார். எதிரில் இருந்த கிராண்ட்ஹோம் பாதி தூரம் ஓடி வந்த பின்னர், பந்து பீல்டரிடம் சிக்கியதை அறிந்தார்.

தயக்கத்துடன் ஓடினார்

தயக்கத்துடன் ஓடினார்

பீல்டரிடம் பந்து சென்றதால், ரன் ஓட வேண்டாம் என முடிவு செய்த கிராண்ட்ஹோம் திரும்பி ஓட வந்தார். ஆனால், தயக்கத்துடன் ஓடி வந்த அவர் வேகமாக ஓடி வரவும் இல்லை. பேட்டை கீழே வைக்கவும் இல்லை.

விஜய் சூப்பர் ரன் அவுட்

விஜய் சூப்பர் ரன் அவுட்

இதனால், பீல்டரிடம் இருந்து பந்தை பெற்ற விஜய் ஷங்கர், அவரை பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்து விட்டு பந்தை பேட்ஸ்மேன் நிற்கும் திசையை நோக்கி எறிந்தார்.

விஜய் 2 ரன் அவுட்

சிராஜ் முக்கால்வாசி தூரம் ஓடி வந்துவிட்டு, கிராண்ட்ஹோம் திரும்பியதால், மீண்டும் தன் இடத்திற்கே ஓடினார். அதற்குள் விஜய் வீசிய பந்தால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆக, ஒரு நோ பால் வீசி இரண்டு வீரர்களையும் ரன் அவுட் செய்தார் விஜய் ஷங்கர்.

கிராண்ட்ஹோம் அவுட்

கிராண்ட்ஹோம் அவுட்

எனினும், விதிப்படி ஒருவர் தான் ரன் அவுட் ஆக முடியும் என்பதால் கிராண்ட்ஹோம் 37 ரன்கள் அடித்து வெளியேறினார். அவர் தான் பெங்களூர் அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றாக பேட்டிங் செய்த இவருக்கு, ரன் ஓடலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வதில் என்ன சிக்கல் என தெரியவில்லை.

Story first published: Monday, April 1, 2019, 0:16 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
SRH vs RCB : Colin de Grandhomme got out in a comical cum careless way
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X