For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க அதிரடி பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் பும்ரா, புவியை கூப்பிட்டு இருக்காங்க - வெ.இண்டீஸ் கோச்

புனே : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டதற்கு காரணம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அருமையான செயல்பாடுகள் தான் காரணம் என கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஒருநாள் போட்டியில் 322 ரன்கள் குவித்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியை டை செய்து அசத்தியது.

முதல் இரண்டில் போட்டிகளில் இல்லை

முதல் இரண்டில் போட்டிகளில் இல்லை

முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி முதலில் அறிவிக்கப்பட்டது. அதில் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. வேகப் பந்துவீச்சுக்கு உமேஷ் யாதவ், கலீல் அஹ்மது மற்றும் முகம்மது ஷமி அணியில் இருந்தனர்.

ரன் குவித்த வெஸ்ட் இண்டீஸ்

ரன் குவித்த வெஸ்ட் இண்டீஸ்

இந்திய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், 320 ரன்களுக்கும் மேல் குவித்தது. இந்திய அணியில் இருந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். இந்திய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், 320 ரன்களுக்கும் மேல் குவித்தது. இந்திய அணியில் இருந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

எங்க ஆட்டம் தான் காரணம்

எங்க ஆட்டம் தான் காரணம்

கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்த போது அதில் பும்ரா, புவனேஸ்வர் இணைக்கப்பட்டதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான செயல்பாடுகள் தான் காரணம் என கூறி பெருமை பட்டுக் கொண்டுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா. எனினும், இந்தியா ஏற்கனவே கடைசி மூன்று போட்டிகளில் பும்ரா, புவனேஸ்வர் குமாரை அணியில் சேர்க்க திட்டம் வைத்து இருந்தது என கூறப்படுகிறது.

அதிரடி பேட்ஸ்மேன்கள்

அதிரடி பேட்ஸ்மேன்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மையர் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ரன் குவித்தார். ஷாய் ஹோப் இரண்டாவது போட்டியில் கடைசி வரை நின்று ஆடி போட்டியை டை செய்தார்.

Story first published: Friday, October 26, 2018, 18:01 [IST]
Other articles published on Oct 26, 2018
English summary
Stuart Law says West Indies batsmen forced India to bring back Bumrah and Bhuvaneswar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X