ஜாதவைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவையும் மிஸ் செய்கிறது சிஎஸ்கே

Posted By:
சென்னை அணியின் வீரர் காயம் காரணமாக 2 போட்டிகளில் இருந்து விளக்கியுள்ளார்

சென்னை: காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ், இந்தத் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, அணியின் முக்கிய வீராரன சின்ன தல சுரேஷ் ரெய்னா, தசை பிடிப்பால், அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் சீசன் 11 துவங்கியுள்ளது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வென்றுள்ளது. முதல் நாளில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே கடைசி ஓவர்களில் பிராவோ மற்றும் கேதார் ஜாதவில் அதிரடி ஆட்டத்தில் வென்றது.

Suresh Raina to miss two matches in IPL2018 season

காயம் காரணாக வெளியேறிய கேதார் ஜாதவ், கடைசி கட்டத்தில் மீண்டும் களமிறங்கி, அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். அந்தப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அந்த இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமே என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடந்த கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கு காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. வலியைப் பொறுத்துக் கொண்டு விளையாடய அவர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது, சிகிச்சை பெற்று வருவதால், 15ம் தேதி பஞ்சாப் மற்றும் 20ம் தேதி ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக 134 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, முதல் முறையாக, இரண்டு போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை.

இதனிலையில், காயமடைந்திருந்த டுபிளாசி, முரளி விஜய் ஆகியோர் அடுத்தப் போட்டிக்கு தயாராக உள்ளனர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Suresh Raina to miss two matches in IPL2018 season
Story first published: Thursday, April 12, 2018, 11:54 [IST]
Other articles published on Apr 12, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற