For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித்தின் சாதனையை உடைத்த சூர்யகுமார்..டி20 கிரிக்கெட்டின் பிராட்மேன்?நெருக்கடியை சமாளிப்பது எப்படி

நேப்பியர் : 2022 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் 1164 ரன்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

மேலும் நடப்பாண்டில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்துள்ள சூரியகுமார் யாதவ், ஒன்பது முறை டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார் .

இதன் மூலம் குறைந்த போட்டியில் ஒன்பது முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என்ற பெருமையும் சூரியகுமார் யாதவ் பெற்று இருக்கிறார்.

கோலி பண்ண ஸ்லெஜிங்.. ஐஸ்கிரீம்க்குள் சிக்கன்.. சூரியகுமார் யாதவ் வெளியிட்ட ரகசிய தகவல்கோலி பண்ண ஸ்லெஜிங்.. ஐஸ்கிரீம்க்குள் சிக்கன்.. சூரியகுமார் யாதவ் வெளியிட்ட ரகசிய தகவல்

யுத்தி தகர்ப்பு

யுத்தி தகர்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீர சூரியகுமார் யாதவ், சதம் விளாசியதை அடுத்து அவரை கட்டுப்படுத்த தனி வியூகம் வகுத்து வருவதாக பயிற்சியாளர் கிரேக் ஸ்டெத் கூறியிருந்தார். அதேபோன்று இன்று சூரிய குமார் யாதவ்க்கு நியூசிலாந்து வீரர்கள் பந்துகளை அவருக்கு அடிக்க வாய்ப்பு கொடுக்காமல் உடலை நோக்கி Width தராமல் வீசினர். எனினும் சூரிய குமார், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியில் திரும்பினார்.

தொடர் நாயகன் விருது

தொடர் நாயகன் விருது

இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்காக சூரியகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் சூரியகுமார் யாதவ், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். இதன் மூலம் புவனேஸ்வர் குமார், சாகல் ரோகித் சர்மா ஆகியோரின் சாதனை அவர் முறையடித்திருக்கிறார். முதல் இடத்தில் இந்திய விராட் கோலி ஆறு தொடர் நாயகன் விருதுடன் இருக்கிறார்.

நெருக்கடியை சமாளிப்பது எப்படி?

நெருக்கடியை சமாளிப்பது எப்படி?

இந்த நிலையில் இந்த விருது குறித்து பேசிய சூர்யா குமார் யாதவ் நான் நினைத்த மாதிரி அனைத்தும் நல்லபடியாகவே நடக்கிறது. அதனால் எனக்கு மகிழ்ச்சியே.. இன்றைய ஆட்டம் முழுமையாக நடந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் சிராஜ் சொல்வது போல் வானிலையை கட்டுப்படுத்துவது என்பது நமது கையில் இல்லை. நான் பேட்டிங் வரும்போதெல்லாம் எனக்கு நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதே நேரத்தில் என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன்.

இயல்பான ஆட்டம்

இயல்பான ஆட்டம்

களத்திற்குச் சென்று என்னுடைய இயல்பான ஆட்டத்தை நான் எதிர்கொள்கிறேன். நான் எந்த கூடுதல் சுமையையும் சுமந்து கொண்டு களத்திற்கு செல்வதில்லை .நான் போட்டியை இப்படித்தான் எதிர்கொண்டு விளையாடுகிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை என சூர்யகுமார் யாதவ் கூறினார். இந்த நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Tuesday, November 22, 2022, 19:52 [IST]
Other articles published on Nov 22, 2022
English summary
Suryakumar won the man of the series award and reveals the secret of successSuryakumar won the man of the series award and reveals the secret of success ரோகித்தின் சாதனையை உடைத்த சூர்யகுமார்..டி20 கிரிக்கெட்டின் பிராட்மேன்?நெருக்கடியை சமாளிப்பது எப்படி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X