For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி10 லீக் தொடர் பார்க்க ரெடியா? வெறும் 10 ஓவர் தான்.. தொடரே 10 நாள் தான்

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் டி10 எனப்படும் பத்து ஓவர் போட்டித் தொடர் நடைபெற உள்ளது.

ஏற்கனவே, சென்ற ஆண்டு பரிசோதனை முயற்சியாக இந்த தொடரை அனுமதித்தது ஐசிசி. தொடர்ந்து இந்த ஆண்டு இரண்டாவது சீசன் நடத்த அனுமதி அளித்துள்ளது.

ஐசிசி அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் இணைந்துள்ளனர். கிறிஸ் கெயில், ரஷித் கான், ஜாகிர் கான், மோர்னே மோர்கல், மலிங்கா, ரவி போப்பரா, முஹம்மத் நபி, உமர் அக்மல் உள்ளிட்ட பலர் அந்த பட்டியலில் உண்டு.

ஐபிஎல் அளவுக்கு வளரவில்லை

ஐபிஎல் அளவுக்கு வளரவில்லை

இந்த தொடர் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 வரை நடக்க உள்ளது. வெறும் 10 ஓவர்கள் மட்டுமே கொண்ட போட்டிகள் என்பதால் போட்டிகள் விரைவில் முடிந்துவிடும். இதுவும் ஒரு காரணம். எனினும், ஐபிஎல் போல பெரிய நட்சத்திர அந்தஸ்துக்கு இந்த தொடர் வளரவில்லை. இப்போது தான் இந்த தொடர் பற்றிய அறிமுகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நடக்கும் டி10 லீக்

தொடர்ந்து நடக்கும் டி10 லீக்

முதல் சீசன் கடந்த டிசம்பர் 2017இல் நடைபெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு இந்த 10 ஓவர்கள் தொடரை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்த தொடரின் அங்கீகாரம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பாகிஸ்தான் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.

அணிக்கு 8 வெளிநாட்டு வீரர்கள்

அணிக்கு 8 வெளிநாட்டு வீரர்கள்

இந்த இரண்டாவது சீசனில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் சீசனில் ஆறு அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த முறை புதிதாக இரண்டு அணிகள் இணைந்துள்ளன. ஒவ்வொரு அணியிலும் எட்டு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் 64 வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் ஆடுகிறார்கள்.

எட்டு அணிகள் பட்டியல்

எட்டு அணிகள் பட்டியல்

டி10 தொடரில் ஆட உள்ள எட்டு அணிகள் இது தான். மாரத்தா அரேபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா கிங்ஸ், தி கராச்சியன்ஸ், பஞ்சாப் லெஜண்ட்ஸ், பாக்த்துன்ஸ், கொழும்பு லைன்ஸ், ராஜ்புட்ஸ் மற்றும் நார்தர்ன் வாரியர்ஸ். இதில் தி கராச்சியன்ஸ் மற்றும் நார்தர்ன் வாரியர்ஸ் இரண்டும் இந்த ஆண்டில் இருந்து இணைய உள்ள புதிய அணிகள்.

Story first published: Saturday, September 29, 2018, 17:30 [IST]
Other articles published on Sep 29, 2018
English summary
T10 League second season will feature big crickters from the globe
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X