டெஸ்ட் கிரிக்கெட் அழியப் போகுது.. எச்சரிக்கும் பட்லர்

Posted By:

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட் அழியப் போகிறது. அதை செய்யப் போவது டி20 கிரிக்கெட் என்று இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே பல முன்னாள் ஜாம்பவான்கள் டி20 கிரிக்கெட்டின் வருகையால் டெஸ்ட் கிரிக்கெட் அழியும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் ஜோஸ் பட்லரும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஒரு நாள் போட்டிகளுக்கும் கூட டி20 போட்டிகளால் ஆபத்து உண்டு என்றும் பட்லர் கூறியுள்ளார். வருங்காலத்தில் எல்லா வகையான கிரிக்கெட்டும் மறைந்து போய் டி 20 மட்டுமே கோலோச்சும் என்றும் பட்லர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் அதிரடி வீரர்

இங்கிலாந்தின் அதிரடி வீரர்

பட்லர் தொங்கிப் போய்க் கிடந்த இங்கிலாந்து அணியை தூக்கி நிறுத்திய பெருமைக்குரிய இளம் புயல். அதிரடி வீரர். 27 வயதான பட்லர், ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்தின் முக்கிய வீரராக வலம் வருகிறார். அதேபோல டி20 போட்டிகளிலும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஐபிஎல்லைக் கலக்கத் தயார்

ஐபிஎல்லைக் கலக்கத் தயார்

சமீபத்தில்தான் ஐபிஎல் ஏலத்தில் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து செயல்பட்டார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஆடி 202 ரன்களைக் குவித்தார் பட்லர்.

பட்லரை ஈர்த்த ரசிகர்கள்

பட்லரை ஈர்த்த ரசிகர்கள்

இதுகுறித்து பட்லர் கூறுகையில், இந்தக் கூட்டம்தான் எனக்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு டி20 போட்டிகளுக்கு மட்டுமே உள்ளது. எதிர்காலத்தில் டி20 போட்டிகள் பிற வகை கிரிக்கெட்டை முந்தி விடும்.

டி20 மட்டுமே

டி20 மட்டுமே

எதிர்காலத்தில் கிரிக்கெட் என்றாலே அது டி20 கிரிக்கெட்டாக மட்டுமே இருக்கும். அந்த நிலை நிச்சயம் வரும். 15 அல்லது 20 வருடத்தில் அதை எதிர்பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் இருந்தாலும் கூட அது மறைவை நோக்கி நகர்ந்து வருகிறது.

வேகத்தை எதிர்பார்க்கிறார்கள்

வேகத்தை எதிர்பார்க்கிறார்கள்

எல்லோருக்கும் இப்போது எல்லாமே வேகமாக நடக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக உள்ளது. எனவே வருங்காலத்தில் டி20 போட்டிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் பட்லர்.

பொறுத்திருந்து பார்க்கலாம் பட்லர் சொல்வது நடக்குமா என்பதை.

Story first published: Tuesday, February 13, 2018, 10:25 [IST]
Other articles published on Feb 13, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற