அதே ட்ரேட் மார்க் ஷாட்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட் தந்த வில்லியம்ஸ்.. ஆடிப்போன விராட் கோலி- என்ன ஆனது?

மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் விராட் கோலிக்கென்று பவுலர் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகிறது. இந்தப் போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸில் அதிர்ஷ்டம் இருந்த ரோகித் சர்மாவுக்கு பேட்டிங்கில் இன்று அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. விராட் கோலி கூட செய்யல.. சுழன்று அடித்த ஷாட்டால் ரசிகர்கள் ஆச்சரியம்சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. விராட் கோலி கூட செய்யல.. சுழன்று அடித்த ஷாட்டால் ரசிகர்கள் ஆச்சரியம்

தொடக்கமே ஷாக்

தொடக்கமே ஷாக்

தொடக்கத்தில் 2 பவுண்டரிகளை அடித்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, முசர்பானியின் முதல் ஓவரிலேயே சிக்கினார். பவுன்சர் பந்துகளை புல் ஷார்ட்டாக ஆடுவதில் ரோகித் சர்மா கில்லாடியாக இருப்பார். ஆனால் இன்று அதே ஷாட்டால் அவுட்டானார். இதன்பிறகு வந்த விராட் கோலி வழக்கம் போலவே தனது க்ளாசான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கோலியின் விக்கெட்

கோலியின் விக்கெட்

நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 25 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை அடித்தார். ஆனால் அதற்கு மேலும் அவரின் இன்னிங்ஸ் தொடரவில்லை. சீன் வில்லியம்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்ற போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் கோலியின் அரைசதத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோலியின் பலமான ஷாட்

கோலியின் பலமான ஷாட்

இந்நிலையில் கோலி அவுட்டான விதம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. பாகிஸ்தான் போட்டியில் ஹாரிஸ் ராஃப் வீசிய ஷார்ட் பந்தை நம்பவே முடியாத வகையில் கோலி நேராக சிக்ஸருக்கு விளாசியது அனைவருக்கும் தெரியும். இதன்பின்னர் கோலி ஷார்ட்டாக வரும் பந்துகளை நன்றாகவே ஆடி வருகிறார். ஆனால் இன்று அதே பந்தில் சிறிய மாற்றம் செய்து கோலிக்கு ஸ்கெட்ச் வைத்திருந்தார் வில்லியம்ஸ்.

அப்படி என்ன மாற்றம்

அப்படி என்ன மாற்றம்

சற்று ஷார்ட் லெந்த்தாக வீச முடிவெடுத்த வில்லியம்ஸ், அதனை சற்று நகர்த்தி அவுட்சைட் ஆஃப் திசையில் போட்டார். இதனையும் சரியாக கணித்த விராட் கோலி லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். ஆனால் அவுட்சைட் ஆஃப் என்பதை சரியாக கணித்த கோலி, பந்தின் பவுன்சை கணிக்க மறந்துவிட்டார். கோலி வழக்கமாக ஆடுவதை விட இன்னும் சற்று கூடுதல் பவுன்ஸாக போடப்பட்டது.

டாப் எட்ஜ் அவுட்

டாப் எட்ஜ் அவுட்

இதனால் பேட்டின் டாப்பில் பட்ட பந்து, எந்தவித தூரமும் கிடைக்காமல் உயரமாக மட்டுமே சென்று கேட்ச்சாக மாறியது. விராட் கோலியின் கரியரில் மறக்க முடியாத ஷாட்டான அதை பயன்படுத்தியே இன்று வில்லியம்ஸ் விக்கெட் எடுத்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli got into the sean williams's trap in India vs zimbabwe match of t20 world cup 2022
Story first published: Sunday, November 6, 2022, 16:41 [IST]
Other articles published on Nov 6, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X