For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு வந்த அதே நிலைமை.. ஜிம்பாப்வே போட்டியில் கோலிக்கு நடந்த சோகம்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

மெல்பேர்ன்: தோனிக்கு வந்த அதே நிலைமை இன்று விராட் கோலிக்கும் வந்திருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அசுர பலத்துடன் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதனையடுத்து இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் நடைபெறவிருக்கிறது.

தோனிக்கு இந்தியாவில் மெழுகு சிலை.. கேலி, கிண்டலுக்கு ஆளான சிலை.. தோனியா ? ரன்பீர் கபூரா? - சிரிப்பலை தோனிக்கு இந்தியாவில் மெழுகு சிலை.. கேலி, கிண்டலுக்கு ஆளான சிலை.. தோனியா ? ரன்பீர் கபூரா? - சிரிப்பலை

கோலியின் ஃபார்ம்

கோலியின் ஃபார்ம்

இந்திய அணியின் விக்கெட்கள் சில சமயங்களில் மளமளவென சரியும் போதெல்லாம், விராட் கோலி தான் தூண் போன்று நிலைத்து நின்று காப்பாற்றுகிறார். நடப்பு தொடரில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் முதலிடத்தில் இருந்து வருகிறார். அதாவது 5 இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்களுடன் சேர்த்து 246 ரன்களை குவித்துள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இப்படிப்பட்ட நல்ல ஃபார்மில் இருக்கும் கோலி ஜிம்பாப்வே போட்டியில் செய்த ஒரு விஷயம் தான் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இன்னிங்ஸின் போது 7வது ஓவரில் தான் இந்த சம்பவம் நடந்தது. ரன் ஓடுவதில் கிங்-காக இருக்கும் அவர், திடீரென ஓட முடியாமல் கீழே குனிந்து மூச்சு விடவே சிரமப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதுமட்டுமல்லாமல் நெஞ்சை பிடித்துக்கொண்டு அவர் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

என்ன தான் நடந்தது

என்ன தான் நடந்தது

அந்த ஓவரின் 3வது பந்தை அடித்துவிட்டு கோலி 2 ரன்களை வேகமாக ஓடி எடுத்தார். இதன்பின்னர் 4வது பந்தை கேப்பில் அடிக்க முயன்று அருகில் இருந்த ஃபீல்டரிடமே தான் சென்றது. எனினும் அதனை பயன்படுத்த விரும்பிய கோலி, மிகவும் வேகமாக சிங்கிள் ஓடி எடுத்தார். அப்போது தான் அவருக்கு மூச்சு பிரச்சினை ஏற்பட்டு, ஆட்டம் சிறிது விநாடிகள் நிறுத்தப்பட்டது.

 தோனியின் அதே நிலை

தோனியின் அதே நிலை

கடந்த 2020ம் ஆண்டு தோனிக்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. ரன் ஓடுவதில் ஸ்பெஷலிஸ்ட்டான அவர், ஐபிஎல் தொடரின் போது, ஓட முடியாமல் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வந்தார். கோலிக்கும் வயதாகிவிட்டது இது போன்ற சூழல்கள் வரும் போது தான் தெரியவருகிறது. 34 வயதாகும் அவர், அடுத்தாண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, November 7, 2022, 13:34 [IST]
Other articles published on Nov 7, 2022
English summary
Virat kohli's Breathing problem leaves fans in panic of IND vs ZIM match of t20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X