For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை வரலாற்றில் ஒரு ஆச்சர்ய மைதானம் டான்டன்…!! இதுமாதிரி எங்கேயும் நடந்தது இல்லை..!!

டான்டன்: டான்டன் மைதானத்தில் 3 ஒரு நாள் போட்டிகளே நடந்துள்ளது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் சொல்ல போனால், 1999ம் ஆண்டிற்கு பின் எந்த ஒரு நாள் போட்டியும் நடைபெறவில்லை.

உலக கோப்பை தொடரின் 13வது லீக் போட்டி டான்டன் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் களம் கண்டுள்ளன.

வழக்கமாக, உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றால் அணிகள் பற்றியும், வீரர்கள் பற்றியும் தான் அதிக விஷயங்கள் பேசப்படும். ஆனால்... அவற்றை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு பேசும் விஷயமாக இருப்பது எது என்றால்.. அது டான்டன் ஆக தான் இருக்கும்.

அப்படி என்ன கோபமோ? அம்பயரை முட்டித் தள்ளிய ஜேசன் ராய்.. வெடித்து சிரித்த இங்கி. வீரர்கள்! அப்படி என்ன கோபமோ? அம்பயரை முட்டித் தள்ளிய ஜேசன் ராய்.. வெடித்து சிரித்த இங்கி. வீரர்கள்!

3 போட்டிகள் தான்

3 போட்டிகள் தான்

இன்னும், விரிவாக சொல்ல வேண்டுமானால், டான்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின் எண்ணிக்கையே வெறும் 3 தான். கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் இப்படி ஒரு மைதானமா என்று ஆச்சரியப்படக் கூடும். ஆனால், வரலாறுகளும், புள்ளி விவரங்களும் நமக்கு அப்படித் தான் சொல்கின்றன.

6,500 இருக்கைகள்

6,500 இருக்கைகள்

அதாவது... உலக கோப்பை தொடரானது 1975ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில், இந்த விஷயம் ஆச்சரியமான ஒன்றுதான். அந்த கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமாக இருப்பது 6,500 இருக்கைகள் தான்.

1999ல் கடைசி போட்டி

1999ல் கடைசி போட்டி

மைதானத்தில் முதல் போட்டியாக இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. 1983 உலக கோப்பையின் முக்கிய போட்டியாக அது இருந்தது. மொத்தம் 3 ஒரு நாள் போட்டிகளே நடந்துள்ளது. 1999ம் ஆண்டிற்கு பின் எந்த ஒரு நாள் போட்டியும் நடைபெறவில்லை.

318 ரன்கள் சாதனை

318 ரன்கள் சாதனை

1999ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியை கிரிக்கெட் உலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இலங்கைக்கு எதிரான போட்டியில் கங்குலியும், டிராவிட் இருவரும் இணைந்து ருத்ரதாண்டவம் ஆடிய மைதானம் டான்டன். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த ரன்கள் 318. அன்றைய நாட்களில் மிகப் பெரிய சாதனையாக இருந்தது. இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் அது பேசப்பட்டும் வருகிறது.

2 முறை வென்றிருக்கிறது

2 முறை வென்றிருக்கிறது

டான்டன் மைதானத்தில் டாஸ் வென்ற அணியே அதிகம் முறை வென்றுள்ளது. 3 போட்டிகளில் டாஸ் வென்ற அணி 2 முறை வெற்றி பெற்றிருக்கிறது. முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற 42.5 சதவீதம் வாய்ப்பும், 2வதாக மட்டையை பிடிக்கும் அணி 29.32 சதவீதமும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இது டான்டன் மைதானத்தின் வெற்றி, தோல்வி புள்ளி விவரம்.

அதிகபட்ச ஸ்கோர்

அதிகபட்ச ஸ்கோர்

டான்டன் மைதானத்தில் பேட்டிங் சராசரி 32.23, பவுலிங் சராசரி 39.02 சதவீதம். மொத்தமாக 3 சதங்களும், 6 அரைசதங்களும் இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும், இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இந்திய அணி 318 ரன்கள் அடித்துள்ளது.

Story first published: Saturday, June 8, 2019, 20:20 [IST]
Other articles published on Jun 8, 2019
English summary
Tauton cricket ground has some unique future in world cup history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X