For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"தகிட தகிட தகிட தல".. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு திரும்பினார் டோணி!

ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே வீரர்களுக்கு உரிமை கோரும் முறைப்படி ஒவ்வொரு அணிக்கு சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar

பெங்களூரு: 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் தக்க வைத்துள்ள வீரரர்கள் குறித்த விவரம் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்கள் வரை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

தற்போது சென்னை அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தடை நீங்கி மீண்டும் களத்திற்கு திரும்பி இருப்பதால் இப்போதே போட்டியில் சூடு கூடியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அனைத்து அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வீரர்கள் ஏலம் எப்போதும் போல பெங்களூரில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஆளுக்கு 5 வீரர்கள்

ஆளுக்கு 5 வீரர்கள்

ஐபிஎல்லில் சென்னையும் ராஜஸ்தானும் திரும்பி வந்து இருப்பதால் வீரர்கள் மீண்டும் அணிக்கு எடுத்துக் கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு அணி 5 வீரர்கள் வரை மீண்டும் அணிக்கு எடுத்துக்கொள்ள முடியும். இதன்முலம் 3 இந்திய அணி வீரர்களை அதிகபட்சமாக அணியில் எடுக்க முடியும். அதேபோல் 2 வெளிநாட்டு வீரர்களையும், 2 இந்திய அணியில் விளையாடாத வீரர்களையும் அதிகபட்சமாக அணியில் எடுக்க முடியும். அதன்படி தற்போது ஆளுக்கு 5 வீரர்களை தக்க வைத்து பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னையில் டோணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம் - டோணி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், மெக்கல்லம்.

ராயல் சேலஞ்சர்ஸில் கோஹ்லி

ராயல் சேலஞ்சர்ஸில் கோஹ்லி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் -கோஹ்லி, ஏபி டிவில்லியயர்ஸ், யுஸ்வேந்திர சஹல், கேதார் ஜாதவ்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஸ்டீவ் ஸ்மித், அஜிங்கியா ரஹானே, ஷான் வாட்சன்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார். ஷிகர் தவான், ரஷீத் கான், யுவராஜ் சிங்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டேவிட் மில்லர், அக்சர் படேல், கிளன் மேக்ஸ்வெல், விருத்திமான் சஹா.

டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ்

காகிஸோ ரபதா, கிறிஸ் மோரிஸ், ஷிரேயாஸ் அய்யர், குவின்டன் டி காக், ரிஷப் பந்த்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராபின் உத்தப்பா, சுனில் நரீன், கிறிஸ் லின், மனீஷ் பாண்டே

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, கிருணால் பாண்ட்யா, கீரன் போலார்ட்.

அணிகளின் பட்ஜெட்

அணிகளின் பட்ஜெட்

இதற்கிடையே அணிகளின் பட்ஜெட் 80 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக வீரர்களுக்கு 15 கோடி வரை இந்த புதிய முறையில் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அணியின் பட்ஜெட் இரண்டு கோடி ரூபாய் உயர்த்தப்படும்.

Story first published: Thursday, January 4, 2018, 19:52 [IST]
Other articles published on Jan 4, 2018
English summary
Lot of interesting things are going to happen in upcoming IPL season. CSK, Rajasthan team will back to the IPL. IPL 2018 auction will be held in Bangalore on January 27 and 28. In this IPL budget has increased from previous Rs 66 crore to Rs 80 crore. The IPL Council has announced that a team could retain up to five players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X