For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளைய 2வது ஒருநாள் போட்டியில் ஆஸி.யை வீழ்த்துமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. நாக்பூரில் இந்திய அணி

நாக்பூர்: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்க நாக்பூர் சென்றிருக்கிறது இந்திய அணி.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதரா பாத்தில் கடந்த 2ம் தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது.

அஸ்வின், ஜடேஜா உள்ளே... தினேஷ் கார்த்திக் வெளியே... அட.. இது நம்ம கம்பீரின் உலக கோப்பை கனவு அணி அஸ்வின், ஜடேஜா உள்ளே... தினேஷ் கார்த்திக் வெளியே... அட.. இது நம்ம கம்பீரின் உலக கோப்பை கனவு அணி

ஆஸி.236 ரன்கள்

ஆஸி.236 ரன்கள்

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் முகம்மது சமி, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

240 ரன்கள் எடுத்து வெற்றி

240 ரன்கள் எடுத்து வெற்றி

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 81 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1க்கு 0 என முன்னிலை வகிக்கிறது.

2வது ஒருநாள் போட்டி

2வது ஒருநாள் போட்டி

இந் நிலையில், நாளை இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒரு நாள் போட்டி நாக்பூர் விதார்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இன்று நாக்பூர் சென்றிருக்கிறது.

9 ஆட்டங்களில் வெற்றி

நாக்பூரில் இந்தியா 17 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு இந்தியா விளையாடியது. நாக்பூரில் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. ஒன்று விதார்பா கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.

முக்கியமான தொடர்

முக்கியமான தொடர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் மே 30 முதல் இங்கிலாந்தில் உலககோப்பை தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடரின் இதுவாகும்.

இந்தியாவுக்கு சோதனை

இந்தியாவுக்கு சோதனை

எனவே இந்த தொடரில் இந்திய அணியின் திறமை மற்றும் பலம், பலவீனம் அறிய வாய்ப்பாக இந்த தொடர் அமையும். இன்னும் சொல்ல போனால், ஒரு கட்டத்தில், இந்த தொடர் இந்தியாவுக்கு உலககோப்பைக்கு முன் ஒரு சோதனை ஆகும்.

Story first published: Monday, March 4, 2019, 15:00 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
Team india arrived Nagpur for the 2nd ODI against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X