மூங்கில் காடுகளே... வண்டு முனகும் பாடல்களே... கலகலத்த இந்திய அணியின் பயணம்

Ind vs NZ | Team India enjoyed their day off in Blue Spring Putaruru

புட்டாருரூ : தூய்மையான நீர் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படும் நியூசிலாந்தின் புட்டாருரூ பகுதியில் உள்ள ப்ளூ ஸ்பிரிங்சுக்கு இந்திய அணி வீரர்கள் சுற்றுலா சென்றனர்.

இந்திய அணி வீரர்கள் சுற்றுலா சென்றதன் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிசிசிஐ, ப்ளூ ஸ்பிரிங்ஸில் இந்திய வீரர்கள் நீண்ட நடைப்பயணம் மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடியுள்ளனர். இரு அணிகளும் பங்கேற்கும் டெஸ்ட் தொடர் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது.

அஸ்வின் டீமில் இடம் பிடிப்பது கஷ்டம் தான்.. காரணம் அந்த வீரர்.. இந்திய அணியின் திட்டம் இதுதான்!

தலா ஒரு தொடரை கைப்பற்றிய அணிகள்

தலா ஒரு தொடரை கைப்பற்றிய அணிகள்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரின் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்தை அவர்களது சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளும் களமிறங்கிய 3 போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

வரும் 21ம் தேதி துவக்கம்

வரும் 21ம் தேதி துவக்கம்

இதையடுத்து நியூசிலாந்துடன் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மோதவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. முன்னதாக டெஸ்ட் தொடருக்கான பயிற்சியாக நாளை முதல் செடன் பார்க்கில் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் விளையாட உள்ளன.

6வது இடத்தில் நியூசிலாந்து

6வது இடத்தில் நியூசிலாந்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 360 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ள இந்திய அணி, 60 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ள நியூசிலாந்துடன் மோதவுள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் ஐசிசி தரவரிசையின்படி முதலிடத்தில் உள்ள இந்தியா, 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து

கடந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வங்கதேசத்துடன் மோதிய இந்தியா, ஒரு பிங்க் பால் டெஸ்ட் போட்டி உள்பட இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேசத்தை ஓடஓட விரட்டியது. ஆனால் கடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 3க்கு 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது.

பிசிசிஐ புகைப்படம்

இந்நிலையில் நியூசிலாந்தின் புட்டாருரூவின் ப்ளூ ஸ்பிரிங்சில் இந்திய அணியினர் சுற்றுலா மேற்கொண்டனர். தூய்மையான நீர் ஆதாரத்தை கொண்ட அந்தப் பகுதியில் நீண்ட நடை மற்றும் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் ஈடுபட்டுள்ளதாக பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலாவில் விரித்திமான் சாஹா, சத்தீஸ்வர் புஜாரா, அஸ்வின், உமேஷ் யாதவ், ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இளம்வீரர்கள் சுப்மன் கில், பிரித்வி ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Indian Team Visits Blue Springs In New Zealand
Story first published: Thursday, February 13, 2020, 18:11 [IST]
Other articles published on Feb 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X