For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெத்து காட்டும் கத்துக்குட்டி அணிகள்..திருப்புமுனைக்கு பஞ்சமில்லாத அயர்லாந்து Vs ஸ்காட்லாந்து போட்டி

ஹாபர்ட்: டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்தும், அயர்லாந்தும் மோதிய அட்டம், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்து சென்றது.

குரூப் பி பிரிவில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ள அயர்லாந்து அணி, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் முன்சே 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

டி20 உலககோப்பை - இலங்கை அபார வெற்றி.. யுஏஇ அணியை புரட்டி போட்டது.. ஆனாலும் சிக்கல் தீரவில்லைடி20 உலககோப்பை - இலங்கை அபார வெற்றி.. யுஏஇ அணியை புரட்டி போட்டது.. ஆனாலும் சிக்கல் தீரவில்லை

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

இதனைத் தொடர்ந்து மைக்கேல், கிராஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடியது. மேத்திவ் கிராஸ் 5 பவுண்டரிகள் விளாசி 28 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மைக்கேல் ஜோன்ஸ் 38 பந்தில் அரைசதம் கடந்தார். ரிச்சி பெரிங்டன் 27 பந்தில் தன் பங்கிற்கு 37 ரன்கள் விளாச, ஸ்காட்லாந்து அணி 12.5வது ஓவரில் 100 ரன்களை எட்டியது.

177 ரன்கள் இலக்கு

177 ரன்கள் இலக்கு

மைக்கேல் லீக்ஸ் 13 பந்தில் எதிர்கொண்டு 17 ரன்கள் அடிக்க, மறுமுனையில் அதிரடியை காட்டிய மைக்கேல் ஜோன்ஸ் 55 பந்தில் 86 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

அயர்லாந்து தடுமாற்றம்

அயர்லாந்து தடுமாற்றம்

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் 8 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் பால்பிர்லின் 14 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லார்கன் டக்கர் 20 ரன்களிலும், ஹாரி டேக்டார் 14 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் 61 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து தடுமாறியது.

அயர்லாந்து வெற்றி

அயர்லாந்து வெற்றி

இதனையடுத்து அயர்லாந்து தோல்வியை நோக்கி சென்ற நிலையில் களத்தில் ஜோடி சேர்ந்த குர்டிஸ் கேம்பர் மற்றும் ஜார்ஜ் ஜோடி ஸ்காட்லாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். 25 பந்தில் அரைசதம் விளாசிய கேம்பர், தொடர்ந்து அதிரடியை காட்டினார். 32 பந்துகளில் கேம்பர் 72 ரன்கள் விளாசினார். ஜார்ஜ் தன் பங்கிற்கு 39 ரன்கள் சேர்க்க இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 19வது ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, October 19, 2022, 21:48 [IST]
Other articles published on Oct 19, 2022
English summary
Terrific Run chase by Ireland to Beat Scotland in round 1 wc game
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X