
புஜாரா
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து புஜாரா அளித்த பேட்டியில், பிங்க் பால் போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. தீவிரமாக பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு அவுட் ஆனது போல ஆக வாய்ப்பு இல்லை.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் நடந்தது வித்தியாசமான சூழ்நிலை. பந்து அந்த போட்டியில் மிகவும் வேகமாக வந்தது. இது இந்திய அணிக்கு பெரிய அளவில் எதிராக திரும்பியது. நாங்கள் ஒரு போட்டியில்தான் சரியாக ஆடவில்லை.

ஆடினோம்
அதன்பின் அனைத்து போட்டியிலும் நாங்கள் நன்றாக ஆடினோம். அந்த பழைய திக் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் தற்போது அதிக அளவு பிரபலமான பிட்சில் ஆட இருக்கிறோம்.

நம்பிக்கை
நாங்கள் தற்போது மிகவும் நம்பிக்கையாக இருக்கிறோம். பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். பிங்க் பாலில் அதிகம் ஆடிய அனுபவம் இல்லை. ஆனாலும் நாங்கள் பிங்க் பால் போட்டிகளில் நன்றாக ஆடுவோம் என்று புஜாரா கூறியுள்ளார்.