டீ ஷர்ட் போட முடியாது.. பல் துலக்க முடியாது - ஆண்டர்சனின் சாதனைக்கு பின்னால் இருக்கும் "வேதனை"

லண்டன்: ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிரம்மாண்ட சாதனைக்கு பின்னால், மிகப்பெரிய வலிகளும், காயங்களும் உள்ளது பலருக்கும் தெரியாத ஒன்று.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகிற்கு அறிமுகம் செய்த வீரர்களில் மிக முக்கியமானவர், தவிர்க்க முடியாதவர், எல்லாவற்றுக்கும் மேலாக அந்நாட்டின் டாப் மோஸ்ட் பவுலர்.. ஜேம்ஸா ஆண்டர்சன்.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு இல்லையா? இந்தியாவின் ப்ளேயிங் 11ல் ஷர்துல் தாக்கூர்.. முன்னாள் வீரரின் யோசனை!

கடந்த 18 வருடங்களாக இவர் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஆடிய போட்டிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவு அணிக்கு மிக முக்கியமான வீரர் இவர்.

நெருங்க முடியா சாதனை

நெருங்க முடியா சாதனை

இந்நிலையில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் எனும் மகத்தான பெயரை பெற்றுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக், இதற்கு முன் 161 போட்டிகளில் விளையாடி இருந்தார். நேற்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய போது, வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த சாதனையை தகர்த்திருந்தார்.

இங்கிலாந்தில் டாப்

இங்கிலாந்தில் டாப்

இது ஆண்டர்சனின் 162வது டெஸ்ட் போட்டியாகும். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டிலும், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் தலா 168 போட்டிகளிலும், ஜாக் காலிஸ் 165 போட்டிகளிலும், சந்தர்பால் 164 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். அதேபோல், அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில்,

ஸ்டூவர்ட் பிராட் - 148 போட்டிகளுடன் மூன்றாம் இடத்திலும், அலெக் ஸ்டிவர்ட் 133 போட்டிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

தற்செயல்

தற்செயல்

ஆனால், ஆண்டர்சனின் மகத்தான சாதனைக்கு பின்னால் ஏகப்பட்ட வலியும், வேதனைகளும் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில், இதுவரை உலகத்தில் எந்த ஒரு பவுலரும் ஆண்டர்சன் அளவுக்கு அதிக பந்துகள் வீசியதில்லை. தற்போது அவரை இவர் வீசியுள்ள பந்துகளின் எண்ணிக்கை 34,587. கிரிக்கெட்டில் ஒரு பவுலருக்கு எத்தனை ஆர்வம், வெறி இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இத்தனை பந்துகள் வீசுவது மிகக் கடினம். அவர் இத்தனை ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குப்பிடிப்பதற்கு காரணம், இயற்கையாக அல்லது தற்செயலாக அமைந்த ஒரு விஷயம் தான்.

நீண்டகாலம் தாக்குப்பிடிப்பு

நீண்டகாலம் தாக்குப்பிடிப்பு

இதுகுறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவர் பென் லாங்லே கூறுகையில், ஆண்டர்சன் "இயற்கையாகவே ஒல்லியாக இருப்பவர், வேகப்பந்து வீச்சாளராக இருப்பதற்கு நன்கு கட்டமைக்கப்பட்டவர்" என்கிறார். அதாவது ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு என்றே பிறந்தவர் என்கிறார். அவருடைய ஒல்லியான தேக அமைப்பு, உடலின் பல இயக்கங்களுக்கும் அழுத்தங்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது, இதனால் தான் அவரால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடிகிறது" என்கிறார்.

வலி நிவாரணி மருந்துகள்

வலி நிவாரணி மருந்துகள்

தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஆண்டர்சன் தோளில் போட்டுக் கொண்டிருக்கும் சிரமம் மிகவும் அதிகம் என்கின்றனர். அவர் காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, டி-ஷர்ட் போடுவது போடும் வரை வலிகளை எப்போதும் உணர்கிறார் என்று லாங்லே கூறுகிறார். அதுமட்டுமல்ல, வலியைக் குறைக்க ஆண்டர்சன் அடிக்கடி இப்யூபுரூஃபனை எடுத்துக்கொள்கிறார் என்று இங்கிலாந்தின் 'டெலிகிராஃப்' செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 'நான் வலியில்லாமல் பந்து வீசிய தருணங்கள் மிக மிக குறைவு" என்று ஆண்டர்சனே குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த '162 டெஸ்ட் போட்டிகள்' எனும் சாதனைக்கு பின்னால் இத்தனை வேதனை இருக்கிறது என்று பலரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
painkillers behind Anderson's record 162nd Test - ஆண்டர்சன்
Story first published: Friday, June 11, 2021, 16:27 [IST]
Other articles published on Jun 11, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X