
முதல் வீரர்
முதலில் அணியில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலகினார். சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது என்று கூறி இவர் தொடரில் இடம்பெறவில்லை. அதே சமயத்தில் நான்காவது ஒருநாள் போட்டியில் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார் எனப்படுகிறது.

டி யூ பிளசிஸ் விலகல்
அதேபோல் அவருக்கு அடுத்து டி யூ பிளசிஸ் அணியில் இருந்து விலகினார். இவருக்கும் விரலில் காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி உள்ளார். முதல் போட்டியில் இவர் அதிரடியாக சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மொத்தமாக இந்திய தொடரிலேயே இனி விளையாட மாட்டார்.

இவரும்
தற்போது அணியில் இருந்து குயின்டன் டி காக் விலகி இருக்கிறார். இவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இவர் ஒருநாள் மட்டும் டி-20 போட்டியில் விளையாட மாட்டார். முதல் போட்டியில் டி யூ பிளசிஸ் கேப்டனாக இருந்தார். இரண்டாவது போட்டியில் மார்க்ராம் கேப்டனாக இருந்தார். அடுத்த போட்டியில் புதிய கீப்பர் வேறு தேர்வு செய்ய வேண்டும்.

இப்படி ஆகிவிட்டதே
ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியில் இருந்து ஸ்டெயின் விலகினார். அணியில் இருக்கும் பலமான வீரர்கள் எல்லோரும் இப்பொது விலகிவிட்டார். இதனால் ஏற்கனவே திணறும் தென்னாப்பிரிக்க அணி இன்னும் மோசமான நிலைக்கு சென்று ஐசியூவில் அட்மிட் ஆகும் நிலை வரலாம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.