For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிஎன்பிஎல் ஆட்டத்தில் 16 சிக்சர்.. நடப்பு சாம்பியன் சேப்பாக் முதல் வெற்றி.. ஹாட்ரிக் சாதனை

திண்டுக்கல் : டிஎன்பிஎல் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணியும் நடப்பு சாம்பியனான சேப்பாக்கம் அணியும் பல பரிட்சை நடத்தின.

டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக திருச்சி அணி அறிவித்தது. இதனை அடுத்து சேப்பாக்கம் தொடக்க வீரர்களான கௌஷிக் காந்தி , நாராயண் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர்.

கௌசிக் காந்தி 19 ரன்களிலும் ஜெகதீசன் 15 ரன்கள் ஆட்டம் இழக்க மூன்றாவதாக இறங்கிய ராதாகிருஷ்ணன் ஆட்டத்தில் ஒரு புயலே கிளப்பினார்.

TNPL 2022 Defending champion CSG Registered first win

எரிமலை போல் வெடித்த ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், நான்கு சிக்சர்களும் அடங்கும் . அவருக்கு பக்கபலமாக நின்ற சசி தேவ் 35 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதில் 5 சித்தர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இதன் பின்னர் களம் இறங்கிய ராஜகோபால் சதீஷ் , ஹரிஷ் குமார், சோனு யாதவ் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பொய்யாமொழி வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

இதன் மூலம் சேப்பாக் அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியில் தொடக்க வீரர் சந்தோஷ் சிவம் 38 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். அமித் ஷாத்விக் 33 ஆண்டுகளுக்கு வெளியேற மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். ஆதித்யா கணேஷ் மட்டும் நடு வரிசையில் போராடி 28 ரன்கள் சேர்த்தார்.

Recommended Video

Happy Birthday Dhoni: மெர்சலான MSD-யின் Memorable International Innings | Aanee's Appeal | *Cricket

இதன் மூலம் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 6 விக்கட்டு இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கிள்ளி சனி தற்போது முதல் வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, July 6, 2022, 23:55 [IST]
Other articles published on Jul 6, 2022
English summary
TNPL 2022 Defending champion CSG Registered first win டிஎன்பிஎல் ஆட்டத்தில் 16 சிக்சர்.. நடப்பு சாம்பியன் சேப்பாக் முதல் வெற்றி.. ஹாட்ரிக் சாதனை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X