For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிலாந்து அணியில் 2 முக்கிய வீரர்கள் இல்லை.. ஆபத்தை தரும் வீரர் யார்? யாருக்கு வெற்றி வாய்ப்பு

ஐதராபாத் : இந்தியா , நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில் இரு அணிகளும் ஹைதராபாத்தில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை இலங்கையை மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்திய உத்வேகத்துடன் நியூசிலாந்து தொடரில் விளையாடுகிறது.

இந்திய அணியில் கே எல் ராகுல் அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை.

உலக கோப்பை ஹாக்கி - இங்கிலாந்துக்கு தண்ணீ காட்டிய இந்தியா.. பரபரப்பான ஆட்டத்தில் நடந்தது என்ன?உலக கோப்பை ஹாக்கி - இங்கிலாந்துக்கு தண்ணீ காட்டிய இந்தியா.. பரபரப்பான ஆட்டத்தில் நடந்தது என்ன?

இந்திய அணியில் இல்லை

இந்திய அணியில் இல்லை

இதனால் இசான் கிஷன், சூரியகுமார் யாதவ், சாஹல் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் நியூசிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. காரணம் நியூசிலாந்த அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வீழ்த்தி இருக்கிறது. எனினும் நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் இரண்டு பேர் இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடவில்லை.

3 பேர் இல்லை

3 பேர் இல்லை

இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனான வில்லியம்சன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சவுதி ஆகிய இருவரும் இந்திய தொடரில் விளையாடவில்லை. இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் இஷ் சோதியும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

எனினும் நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸ், பின் ஆலன், டாம் லத்தம், சிஎஸ்கே வீரர் கான்வே, டாரல் மிட்சல் ,ஹென்றி நிக்கோலஸ் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்களும், லோகி பெகுர்சன், மிட்செல் சாண்டனர், பிராஸ்வெல் போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இதே போன்று நியூசிலாந்தின் பிளாயர் டிக்னர் என்ற வேக பந்துவீச்சாளர் இந்தியாவுக்கு தலைவலியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிக்கு சாதகம்

நியூசிக்கு சாதகம்

இந்திய ஆடுகளங்களில் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கலாம். பாகிஸ்தானில் விளையாடிவிட்டு இந்தியாவுக்கு வருவதால் சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்ற அனுபவமும் நிச்சயம் நியூசி. வீரர்களுக்கு கிடைத்திருக்கும். இலங்கை தொடரை காட்டிலும் நியூசிலாந்து தொடர் நிச்சயமாக இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்ப படி ஒன்று முப்பது மணிக்கு ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

Story first published: Tuesday, January 17, 2023, 19:16 [IST]
Other articles published on Jan 17, 2023
English summary
Two star Players in New zealand team is not playing in india odi series நியூசிலாந்து அணியில் 2 முக்கிய வீரர்கள் இல்லை.. ஆபத்தை தரும் வீரர் யார்? யாருக்கு வெற்றி வாய்ப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X