மொத்தமாக மாறுகிறது.. டிஆர்எஸ் விதிமுறையில் முக்கிய அம்சத்தை நீக்க முடிவு? செம டிவிஸ்ட் வர போகுது!

சென்னை: டிஆர்எஸ் ரிவ்யூவில் இருக்கும் அம்பயர்ஸ் கால் அம்சத்தை நீக்கும் முடிவில் ஐசிசி இருப்பதாக கூறுகிறார்கள்.

கிரிக்கெட் உலகில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் விதி என்றால் அது டிஆர்எஸ் விதிதான். டிஆர்எஸ் என்பது களத்தில் நடுவர் வழங்கும் முடிவை ரிவ்யூ செய்யும் முறையாகும்.

இவங்களை வச்சுக்கிட்டு என்ன பண்ணுறது.. அதிருப்தியில் 4 பேர்.. தோனிக்கு ஏற்பட்ட காம்பினேஷன் குழப்பம்!

மூன்றாவது நடுவர் மூலம் கள நடுவர் கொடுத்த முடிவை மீண்டும் சோதனை செய்து சரியான முடிவை அறிவிப்பது டிஆர்எஸ் ஆகும். இந்த முறை காரணமாக கிரிக்கெட் உலகம் பெரிய அளவில் மாறி உள்ளது.

எப்படி

எப்படி

ஆனால் இந்த டிஆர்எஸ் முறையில் அம்பயர்ஸ் கால் என்ற அம்சம் உள்ளது. எல்பிடபிள்யூ போன்ற விக்கெட்டுகளின் போது இந்த அம்சம் பயன்படுத்தும். பொதுவாக பந்து சரியாக லைனில் குத்தி, ஸ்டம்பில் மோதுவது போல சென்றால் அது எல்பிடபிள்யூ ஆகும். ஆனால் அம்பயர்ஸ் கால் கொஞ்சம் வித்தியாசமானது.

வித்தியாசம்

வித்தியாசம்

இந்த அம்பயர்ஸ் கால் மூலம் பந்து லேசாக ஸ்டம்பை உரசுவது போல சென்றால்,பந்து முழுமையாக ஸ்டம்பில் குத்தாமல் சென்றால், அவுட் சைட் ஸ்டம்பில் குத்தினால் அது அம்பயர்ஸ் கால் என்று அழைக்கப்படும். இதில் ரிவ்யூவிற்கு முன் நடுவர் என்ன தீர்ப்பு கொடுத்தாரோ அதே தீர்ப்பு வழங்கப்படும்.

அதே தீர்ப்பு

அதே தீர்ப்பு

அதாவது நடுவர் விக்கெட் கொடுத்து இருந்தால் ரிவ்யூவிற்கு பின்பும் விக்கெட் என்றே குறிப்பிடப்படும். நடுவர் விக்கெட் இல்லை என்று கொடுத்து இருந்தால் ரிவ்யூவிற்கு பின்பும் விக்கெட் இல்லை என்றே குறிப்பிடப்படும். இந்தஅம்சம் காரணமாக களத்தில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டது.

 நடுவர் தீர்ப்பு

நடுவர் தீர்ப்பு

நடுவர் தீர்ப்புதான் இறுதி என்றால் பின் எதற்கு டிஆர்எஸ் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அம்பயர்ஸ் கால் காரணமாக தற்போது நடந்து வரும் இந்தியா இங்கிலாந்து ஆட்டங்களில் கூட பெரிய அளவில் சர்ச்சைகள் ஏற்பட்டது . விராட் கோலி கூட அம்பயர்ஸ் கால் காரணமாகவே அவுட் ஆனார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்த அம்பயர்ஸ் கால் அம்சத்தை நீக்கும் முடிவில் ஐசிசி இருப்பதாக கூறுகிறார்கள். இன்று நடந்த எம்சிசி ஆலோசனை கூட்டத்தில் இந்த அம்பயர்ஸ் கால் அம்சத்திற்கு எதிராக உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் மொத்தமாக இந்த அம்சத்தை நீக்கும் எண்ணத்தில் ஐசிசி இருப்பதாக கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Umpires call may get scrapped in DRS rules due to so many requests from cricketers.
Story first published: Tuesday, February 23, 2021, 13:35 [IST]
Other articles published on Feb 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X