“இதெல்லாம் ரொம்ப தப்புங்க”.. இந்தியாவுக்காக அம்பயர் கொடுத்த தீர்ப்பு.. கொந்தளித்த வங்கதேச ரசிகர்கள்

வங்கதேசம்: இந்திய அணிக்கு சாதகமாக அம்பயர் செய்த ஒரு செயலால் வங்கதேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கிறது.

இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 உலகக்கோப்பையில் பெற்ற தோல்விக்காக வங்கதேசம் காத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“இனி யாருக்கும் ரெஸ்ட் கிடையாது”.. கவாஸ்கர் யோசனையால் கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்ன காரணம்! “இனி யாருக்கும் ரெஸ்ட் கிடையாது”.. கவாஸ்கர் யோசனையால் கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்ன காரணம்!

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இந்திய ஏ அணி வங்கதேசத்துக்கு சென்று 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் நாளான இன்று சௌரப் குமார் மற்றும் நவ்தீப் சிங்கின் அபார பவுலிங்கால் வங்கதேச அணி 112 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பே 120 ரன்கள் அடித்து 8 ரன்கள் முன்னிலை பெற்றது.

சர்ச்சை முடிவு

சர்ச்சை முடிவு

இந்நிலையில் இந்த போட்டியில் வங்கதேசத்திற்கு அநீதி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய இன்னிங்ஸின் 9வது ஓவரின் போது கலலெத் அகமது வீசிய பந்தை ஓப்பனிங் பேட்டர் அபினன்யூ ஈஸ்வரன் மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு, வேகமாக சிங்கிள் அடிக்க ஓடினார். அப்போது அங்கிருந்த ஃபீல்டர் நான் ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்த ஸ்டம்பிற்கு சரியாக த்ரோ அடித்தார்.

 அம்பயர் முடிவு

அம்பயர் முடிவு

இதனையடுத்து வங்கதேச அணி வீரர்கள் அனைவரும் அவுட் என அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர்கள் அவுட் கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். ஈஸ்வரன் வேகமாக கிரீஸுக்குள் சென்றுவிட்டதாக கூறினார். கடைசியில் பார்த்தால் வங்கதேச அணி கூறியது தான் உண்மை. உண்மையில் ஈஸ்வரன் வருவதற்குள் ஸ்டம்ப் அவு செய்யப்பட்டுவிட்டது.

 ரசிகர்கள் ஆத்திரம்

ரசிகர்கள் ஆத்திரம்

அப்போது மட்டும் அம்பயர்கள் அவுட் கொடுத்திருந்தால் இந்திய அணி 29 ரன்களுக்கெல்லாம் முதல் விக்கெட்டை இழந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதால், 120 ரன்கள் வரை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை. இதனால் அம்பயர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Umpire decision in India A vs Bangladesh A test Series goes controversial in Social media
Story first published: Tuesday, November 29, 2022, 18:41 [IST]
Other articles published on Nov 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X