For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு ட்வீட்டும், விஜய் சங்கர் வில(க்)கலும்.. வெளிவராத பரபரப்பான பின்னணி தகவல்கள்…!!

லண்டன்: உலக கோப்பை தொடரில் இருந்து ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் காயம் காரணமாக விலகவில்லை என்றும் விலக்கப்பட்டிருக்கிறார் என்றும் அதற்கு முரளி கார்த்திக் டுவீட்டே காரணம் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போது முதன்முறையாக விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் மீண்டும் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் பந்து வீசும் வாய்ப்பு அளிக்கப் படவில்லை. அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுடன் விளையாடும்போதும் விஜய் சங்கர் பந்து வீசவில்லை.

பயிற்சியில் காயம்

பயிற்சியில் காயம்

பின்னர் விஜய் சங்கருக்கு பயிற்சியின்போது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதாவது, வலைப்பயிற்சியில் போது வேக பந்துவீச்சாளர் பும்ரா வீசிய பந்து காலில்பட்டு காயமடைந்தார் என்று தகவல்கள் உலா வந்தன. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் களம் இறக்கப்படவில்லை.

ரிஷப் பன்ட் சேர்ப்பு

ரிஷப் பன்ட் சேர்ப்பு

அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பன்ட் இங்கிலாந்துக்கு எதிராக அணியில் சேர்க்கப் பட்டார். அந்த போட்டியில் தொடக்கத்தில் தடுமாறி ரன் அவுட் ஆக இருந்தாலும், பின்னர் சுதாரித்துக் கொண்ட பன்ட் ஓரளவு சிறப்பாகவே ஆடினார்.

சேர்க்கப்படவில்லை

சேர்க்கப்படவில்லை

இங்கிலாந்து போட்டியின் போது, அணியில் சேர்க்கப்படாததை விட வேண்டும் என்று அணியில் சேர்க்காமல் உட்கார வைக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக நேற்று ஒரு நிகழ்வு நடந்தது. காலில் காயம், அடிப்பட்டு விட்டது என்று கூறப்பட்ட விஜய் சங்கர் நேற்றைய போட்டி நேர இடைவேளையின் போது அனைவருக்கும் கூல்டிரிங்ஸ் எடுத்து வந்தார்.

வர்ணனையாளர்கள் விமர்சனம்

வர்ணனையாளர்கள் விமர்சனம்

இந்த காட்சி நேரடி ஒளிப்பரப்பாக அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. அப்போது வர்ணனையாளர்கள்( குறிப்பாக தமிழ் வர்ணனையாளர்கள்) இது குறித்து விமர்சனத்தை பதிவு செய்தனர். காலில் அடிப்பட்டிருக்குன்னு சொன்னாங்க... ஆனால் கூல்டிரிங்ஸ் எடுத்துட்டு ஓடி வந்திட்டு இருக்காரு என்று வர்ணனையும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

முரளி டுவிட்டர்

அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் முரளி கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: விஜய் சங்கரின் காலில் அடிப்பட்டிருப்பதால் அவரால் போட்டியில் கலந்துக் கொள்ள முடியவில்லை. பின்னர் ஏன் குளிர் பானத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்? அதனை செய்ய அவரை தவிர அணியில் வேறு யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடரும் நிராகரிப்பு

தொடரும் நிராகரிப்பு

தமிழக வீரர்கள், இந்திய அணியில் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதை தான் முரளி கார்த்திக் அப்படி குறிப்பிடுகிறார் என்று கருத்துகள் வெளி வந்தன. விஜய் சங்கர் விலகல் அதை தான் சொல்லியிருக்கிறது போன்ற விமர்சனங்களும் இப்போது வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

தவான், ரிஷப் பன்ட். கேஎல் ராகுல் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத் துவத்தை தமிழக வீரர்களுக்கு வழங்கவில்லை என்று சந்தேகமும் இந்த சம்பவங்கள் மூலம் வந்துள்ளதாக ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதனை மறுக்கவும் முடியாது.. ஏன் என்றால் தினேஷ் கார்த்திக் என்பவரை இந்த தொடரில் இன்னும் இந்திய அணியில் எடுக்க வில்லையே...!!

Story first published: Monday, July 1, 2019, 15:46 [IST]
Other articles published on Jul 1, 2019
English summary
Vijay Shankar ruled out of world cup because of murali kartiks tweet, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X