For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராத் கோஹ்லியின் இங்கிலாந்து சதமும்.. கொஞ்சம் சாதனைகளும்!

எட்பாஸ்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி 149 ரன்களை குவித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க அச்சதத்தின் பின்னால் பல சாதனைகள் உள்ளன. இதுதொடர்பான புள்ளிவிவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

இங்கிலாந்து மண்ணில் விராட் கோஹ்லி அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இங்கிலாந்து மண்ணில் இந்திய கேப்டன் அடித்த ரன்கள் வரிசையில் இது இரண்டாமிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னாள் அசாருதீன் அடித்த 179 ரன்கள் இந்திய கேப்டனின் அதிகபட்ச ரன்கள் ஆகும்.

கேப்டனாக 15ஆவது சதம்

கேப்டனாக 15ஆவது சதம்

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கேப்டனாக அடிக்கும் 15ஆவது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்த கேப்டன்கள் வரிசையில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் தென்னாபிரிக்காவின் ஸ்மித் 22 சதங்களுடனும், இரண்டாமிடத்தில் ரிக்கி பாண்டிங் 19 சதங்களுடனும் உள்ளனர். தற்போது மூன்றாமிடத்தில் விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோர் உள்ளனர். இந்திய வீரர்களில் அதிக சதம் அடித்த டெஸ்ட் கேப்டன் இவரே.

டெஸ்ட் வீரராக 22ஆவது சதம்

டெஸ்ட் வீரராக 22ஆவது சதம்

சர்வதேச டெஸ்ட் போட்டி வரலாற்றில் விராட் கோஹ்லி அடிக்கும் 22ஆவது சதம் இதுவாகும். அதிவேகமாக 22 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காமிடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் சர் டான் ப்ராட்மேன் உள்ளார். இவர் 58 இன்னிங்ஸ்களில் 22 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோஹ்லி 113 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை புரிந்துள்ளார்.

150 ரன்களுக்கு குறைவாக

150 ரன்களுக்கு குறைவாக

விராட் கோஹ்லி அடித்த 22 சதங்களில் 12 முறை 150 ரன்களை கடந்துள்ளார். கடந்த 12 சதங்களில் அவர் 150 ரன்களுக்கு கீழே அவுட் ஆவது இதுவே முதல் முறை. அதாவது கடந்த ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு சதம் அடித்தபின் அவர் 150 ரன்களுக்கு கீழே அவுட் ஆவது இதுவே முதல் முறை. முதல் 11 சதங்களில் அவர் 150 ரன்களுக்கு கீழே அவுட் ஆனது 9 முறை. அடுத்த 11 சதங்களில் அவர் 150 ரன்களுக்கு கீழே அவுட் ஆனது ஒரே ஒரு முறை மட்டுமே. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராட் கோஹ்லி 149 ரன்களை எடுத்தார்.

கேப்டன் பங்களிப்பில் 2வது இடம்

கேப்டன் பங்களிப்பில் 2வது இடம்

இந்திய அணியின் மொத்த ஸ்கோரில் விராட் கோஹ்லி 54.37% ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்திய கேப்டன்கள் அளித்த பங்களிப்பில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடத்தில் தோனி (55.41%) உள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 82 ரன்களை குவித்தார். அப்போட்டியில் இந்திய அணி 148 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.








Story first published: Friday, August 3, 2018, 15:14 [IST]
Other articles published on Aug 3, 2018
English summary
Stastics behind Virat Kohl's Century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X