கேஎல் ராகுல் திருமணம் - பரிசுகளை அள்ளிக் கொட்டிய தோனி, கோலி.. விலையை கேட்டா "ஆடி" போய்டுவீங்க

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கருதப்படுபவர் கே எல் ராகுல். இந்திய அணியின் அடுத்த கேப்டன் என உத்தேசிக்கப்பட்ட கே எல் ராகுல் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இந்தியா அணிக்கு நடு வரிசையில் விளையாடுகிறார்.

எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டன் ஆகும் தகுதியை கே எல் ராகுல் பெற்றுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டன் பதவி கே எல் ராகுலுக்கு இல்லை என்றாலும் அவர் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுகிறார்.

கேஎல் ராகுல் தான் சிறந்த கேப்டன்.. ஹர்திக் பற்றி எல்லாம் தெரியாது.. முன்னாள் பயிற்சியாளர் கருத்து கேஎல் ராகுல் தான் சிறந்த கேப்டன்.. ஹர்திக் பற்றி எல்லாம் தெரியாது.. முன்னாள் பயிற்சியாளர் கருத்து

திருமணம்

திருமணம்

இந்த நிலையில் கே எல் ராகுலுக்கு அவருடைய நீண்ட நாள் காதலி ஆன நடிகர் சுனில் செட்டியின் மகள் ஆதியா செட்டியுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி காந்தாளாவில் உள்ள சுனிலின் பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றது. இதில் கே எல் ராகுல் மற்றும் அதியா செட்டியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்காக நியூசிலாந்து தொடரில் கே எல் ராகுல் விளையாடவில்லை.

பரிசுப் பொருட்கள்

பரிசுப் பொருட்கள்

எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய தொடர் இருப்பதால் கே எல் ராகுல் வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி இந்திய அணிக்கு திரும்பி பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக கே எல் ராகுல் திருமண வரவேற்பு விழா ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கே எல் ராகுல் திருமண நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியாவிட்டாலும் பல பிரபலங்கள் கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தி இருக்கிறார்கள்.

 கோலியின் மெகா பரிசு

கோலியின் மெகா பரிசு

குறிப்பாக கே எல் ராகுலின் நெருங்கிய நண்பராக கருதப்படும் விராட் கோலி, கே.எல். ராகுல் தம்பதிக்கு 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இருவரும் விளையாடிய போது அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது. இருவரும் சகோதரர்கள் போல் பழகிக் கொண்டதால் கே எல் ராகுல் திருமணத்திற்கு பெரிய பரிசை விராட் கோலி வழங்கியிருக்கிறார்.

தோனியின் பரிசு

தோனியின் பரிசு

இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கே எல் ராகுலுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கவாஸ்கி நிஞ்சா பைக்கை பரிசாக வழங்கியிருக்கிறார் என தெரிகிறது. தோனியை போல் ராகுலும் ஒரு பைக் பிரியர் என்பதால் அவருக்கு அவருடைய விருப்பப்படியே இந்த விலைமதிப்புள்ள பைக்கை தோனி பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போன்று பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் நெருங்கிய நண்பரான நடிகர் சல்மான் கான் கே எல் ராகுல் தம்பதிகளுக்கு ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடி காரை பரிசாக வழங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli and MS Dhoni Gifted Most valuable items for KL Rahul Marriage கேஎல் ராகுல் திருமணம் - பரிசுகளை அள்ளிக் கொட்டிய தோனி, கோலி.. விலையை கேட்டா "ஆடி" போய்டுவீங்க
Story first published: Wednesday, January 25, 2023, 21:51 [IST]
Other articles published on Jan 25, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X