For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND VS AUS 1st T20 - விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழப்பு.. ரோகித் சர்மாவும் ஏமாற்றம்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது.

மொஹாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட்,பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இந்த முடிவை எடுத்ததாக அவர் அறிவித்தார்.

இந்திய அணிக்கு பின்னடைவு.. முதல் டி20க்கான பிட்ச் ரிப்போர்ட்.. டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்?? இந்திய அணிக்கு பின்னடைவு.. முதல் டி20க்கான பிட்ச் ரிப்போர்ட்.. டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்??

விமர்சனம்

விமர்சனம்

இதனால், இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கினர். குறிப்பாக கேஎல் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்ததால், அவரும் அதிரடியை காட்ட முயற்சி செய்தார்.

ரோகித் சிக்சர்

ரோகித் சிக்சர்

ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரம்பம் முதலே கட்டுக்கோப்பாக பந்துவீசினர். பந்தும், பேட்டிற்கு சரிவரவில்லை. ஹேசல்வுட் வீசிய முதல் ஓவரில் வெறும் 4 ரன்கள் தான் சென்றது.இதனையடுத்து 2வது ஓவரில் பாட் கம்மின்ஸ் வீசிய முதல் 3 பந்துகளில் ரன் போகவில்லை. இருப்பினும் ரோகித் சர்மா தனது அதிரடியை காட்டி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை விரட்டினார்.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

இதனையடுத்து ஹேசல்வுட் ஓவர் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் ரோகித் சர்மா அடித்து ஆட முற்பட்டு, அது பேட்டின் நுனியில் பட அது கேட்ச் ஆனது. இதன் பிறகு கேஎல் ராகுல் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். விராட் கோலி வந்ததும் ஆடம் சாம்பா பந்துவீச வந்தார். அவர் பந்தை எதிர்கொள்ளவும் சற்று கோலி தடுமாறினார்.

கோலி அவுட்

கோலி அவுட்

இதனால், டாட் பந்துகள் அதிகமாக தொடங்கியதால், ஆட்டத்தில் அழுத்தம் ஏற்பட்டது. அதனை உடைக்க விராட் கோலி ஒரு ஷாட் அடிக்க, அது நேராக கேம்ரான் கிரின் கையில் பிடிப்பட்டது. இந்தியா 2 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தாலும், ராகுல் மற்றும் சூர்யகுமார் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, September 20, 2022, 20:40 [IST]
Other articles published on Sep 20, 2022
English summary
Virat kohli and Rohit sharma disappointed performance vs aus 1st t20i விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழப்பு.. ரோகித் சர்மாவும் ஏமாற்றம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X