ஸ்விட்சர்லாந்தில் மனைவியுடன் விராட் கோலி சுற்றுலா... புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா

கஸ்தாத் : சுவிட்சர்லாந்தின் கஸ்தாத் மலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களுடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் தன்னுடைய காதலி நடாஷா தலாலுடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இவர்கள் நால்வரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டார்.

பாலிவுட் நடிவர் வருண் தவான் மலையின் நண்பர்கள் என்ற கேப்ஷனுடன் இந்த புகைப்படத்தை மறுபதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது.

சிஸ்டத்தை எதிர்த்து தான் போராட்டம்.. மேரி கோமை எதிர்த்து அல்ல! இளம் குத்துச்சண்டை வீராங்கனை உருக்கம்

டிவிட்டர் பக்கத்தில் பதிவு

டிவிட்டர் பக்கத்தில் பதிவு

கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும், தங்களுக்கு சிறிய இடைவெளி கிடைத்தாலும், உடனடியாக ஒரு சுற்றுலாவை திட்டமிட்டு விடுகின்றனர். அவர்களது கொண்டாட்டங்களை தங்களது டிவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிடவும் அவர்கள் தவறுவதில்லை.

விராட் கோலி பதிவு

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை வெற்றிகரமாக முடித்த விராட் கோலி, தன்னுடைய காதல் மனைவியுடன் சுவிட்சர்லாந்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இரு தினங்களுக்கு முன்பு அவர் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

ஏராளமான லைக்குகள்

இந்நிலையில் தங்களது கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அனுஷ்கா சர்மா, தாங்கள் சுவிட்சர்லாந்தின் கஸ்தாத் மலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணிநேரங்களில் ஏறக்குறைய 20 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

"மலைகளின் நண்பர்கள்"

விராட் கோலி, அனுஷ்கா சர்மா, வருண் தவான் மற்றும் அவரது காதலி நடாஷா தலால் ஆகியோர் உள்ள இந்த புகைப்படத்தை மறுபதிவிட்ட பாலிவுட் நடிகர் வருண் தவான், தாங்கள் மலைகளின் காதலர்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் 10 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடன் போட்டி

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடன் போட்டி

வரும் 5ம் தேதி இலங்கை அணியுடன் சர்வதேச டி20 தொடரிலும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் சர்சதேவ ஒருநாள் போட்டித் தொடரிலும் மோதவுள்ள விராட் தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து நியூசிலாந்தில் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் மோதவுள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Virat Kohli & Anushka sharma enjoys their trip in Switzerland with Varun Dhawan & Natasha Dalal
Story first published: Monday, December 30, 2019, 14:36 [IST]
Other articles published on Dec 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X